ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 9 pm
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM
author img

By

Published : Mar 20, 2021, 8:41 PM IST

தமிழ்நாட்டில் 217.35 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் - சத்யபிரத சாகு

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை 217.35 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

எல்.கே.சுதீஷுக்கு கரோனா

தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதி கோரி ராஜிவ் ரஞ்சனிடம் உ.பி. எம்பி மனு!

தமிழ்நாடு மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டுமென, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்பி இன்று (மார்ச் 20) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலரைச் சந்தித்து மனு அளித்துள்ளார்.

இந்தியில் துண்டுப் பிரதிகளை வழங்கி பரப்புரைசெய்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்!

ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் இந்தி மொழியில் துண்டுப்பிரதி அடித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருவது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

காயம் பட்ட கமல்; பழக்கூடை அனுப்பிய வானதி!

நடைப்பயிற்சியின்போது காலில் காயம்பட்ட கமல் ஹாசன் குணம்பெற வாழ்த்து தெரிவித்து, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பழக்கூடையும் கடிதமும் அனுப்பிவைத்தார்.

10 ஆண்டுகள் வனவாசம் சென்றும் திமுக திருந்தவில்லை!

இந்தத் தேர்தலோடு திமுகவிற்கு மக்கள் முடிவுரை எழுத வேண்டும் என விழுப்புரத்தில் நடந்த பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பார்வையற்ற பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி!

நாகர்கோவிலில் பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. பந்தின் அசைவு சத்தத்தை வைத்து வித்தியாசமான முறையில் நடந்த இப்போட்டியில் பல மாநிலங்களிலிருந்து 42 மாணவிகள் கலந்துகொண்டனர்.

திருவள்ளூரில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பு!

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்களிடம் மாவட்டத் தேர்தல் அலுவலர் பா. பொன்னையா ரூ.200 அபராதம் வசூலித்தார். பின் பொதுமக்களிடம் கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பசியால் இறந்த மூதாட்டி: நிர்வாகிகள் மறுப்பு

மந்தர் பகுதியில் 63 வயதான துகியா ஓரான் என்ற பெண் பட்டினி மற்றும் நோயால் இறந்ததாகக் கூறப்படுகிறது.

’சுல்தான்’ பட ட்ரெய்லர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர் கார்த்தி நடித்துள்ள ’சுல்தான்’ படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.