ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - 9 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

author img

By

Published : Nov 4, 2021, 9:40 AM IST

1. ரூ.14 கோடி ரூபாய் மோசடி - முன்னாள் அமைச்சர் மீது கேரள பெண் புகார்

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 14 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

2. கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பு அவசர காலப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

3. ரஜோரி எல்லையில் தீபாவளி கொண்டாடும் பிரதமர்

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி கொண்டாடவுள்ளார்.

4. கோவாக்சினுக்கு உலக அங்கீகாரம் - பாரத் பயோட்டெக் தலைவர் பெருமிதம்

நாட்டிற்கும் பாரத் பயோட்டெக் நிறுவனத்திற்கும் உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பாரத் பயோட்டெக் நிறுவனத் தலைவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.

5. மாநில சிறுபான்மை ஆணையத்தை திருத்தி அரசாணை

தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தில் மொழி சிறுபான்மையினரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

6. பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் அதிகரிக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

7. தீவுத் திடலில் பட்டாசு விற்பனை மந்தம் - வேதனையில் வியாபாரிகள்

சென்னை தீவுத் திடல் மைதானத்தில் அமைந்துள்ள மொத்த பட்டாசு விற்பனை கடைகளில் பட்டாசு விற்பனை மிகவும் மந்தமாக உள்ளதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

8.சாலைகளின் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் - சென்னை மாநகராட்சி

மழைக் காலத்தில் சாலையில் உள்ள பள்ளங்களில் ண்ணீர் தேங்கி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

9. தீபாவளி தின ராசிபலன் - நவம்பர் 4

தீபாவளி பண்டிகை இன்று (நவ. 4) கொண்டாடப்பட்டும் வேளையில், நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

10. T20 WORLDCUP: ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா

டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.