ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - 9 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-9-am
top-10-news-at-9-am
author img

By

Published : Oct 31, 2021, 9:09 AM IST

1. அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம்!

மாரடைப்பால் உயிரிழந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

2. பண்டிகை நாள்களில் கவனமாக இருங்கள் மக்களே... அமைச்சர் முன்னெச்சரிக்கை

தீபாவளிப் பண்டிகை காலங்களில் கரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாகக் கடைபிடிப்பது மிகவும் அவசியமான ஒன்று என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

3. இந்தியா 75: புகழ்பெற்ற ஜாமியா பல்கலைக்கழகத்தை நிறுவிய கல்வித் தந்தைகள்!

இந்தியா தனது 75ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடிவரும் இந்த வேளையில் ஜாமியாவின் நிறுவனர்களான டாக்டர் முக்தார் அகமது அன்சாரி, ஹகிம் அஜ்மல் கான் ஆகிய இருவரையும் நாம் நினைவுகூர வேண்டும்.

4. ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்த விவகாரத்தில், உயர்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

5. ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக வெற்றி பெரும்’ - கே.என்.நேரு

சேலத்தில் நடந்த ஒருங்கிணைந்த மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

6. ’பெண்களை பகிரங்கமாக மிரட்டும் காங்கேயம் நகராட்சி ஆணையர்... நடவடிக்கை எடுக்காத அரசு’ - சிஐடியு தலைவர் கவலை!

”காங்கேயம் நகராட்சி ஆணையர் பெண்களை பகிரங்கமாக மிரட்டுகிறார். இது குறித்து புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெண்கள் பாலியல் விவகாரங்களில் கூட மாதக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தமிழ்நாட்டில் அபாயகரமான போக்கு” - சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன்

7. ரஜினி நலம்பெற தீச்சட்டி எடுத்து வேண்டிய ரசிகர்கள்!

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற புதுச்சேரி ரசிகர்கள் தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

8. 'இனிது இனிது' நாயகிக்கு இன்று பிறந்தநாள்!

நடிகை ரேஷ்மி மேனன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

9. கரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகர்!

பாலிவுட்டின் மூத்த நடிகரான யூசுப் உசைன் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 73.

10. பட்டாசை வெடித்த பட்லர்; பஞ்சு பஞ்சாய் பறந்த ஆஸ்திரேலியா!

டி20 உலகக்கோப்பை தொடரின் ’சூப்பர் 12’ சுற்றுப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.