ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - 9 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-9-am
top-10-news-at-9-am
author img

By

Published : Oct 26, 2021, 9:07 AM IST

1. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: இருவர் அதிரடி கைது

கோடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், அவரது நண்பர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

2. தமிழ்நாட்டில் டெங்கு: 300க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தமிழ்நாட்டில் 300-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

3. தீபாவளிக்கு அரிசி, சர்க்கரை இலவசம் - புதுச்சேரி அரசு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை ஆகியவை இலவசமாக வழங்கப்படும் எனப் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

4. முல்லை பெரியாறு அணை திறப்பு உள்நோக்கம் கொண்டது - பி.ஆர். பாண்டியன் கருத்து!

முல்லைப் பெரியாறு அணை திறப்பு கேரள முதலமைச்சரின் கடிதம் உள்நோக்கம் கொண்டது. 142 அடி கொள்ளளவு உயர்த்தி 5 மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரியுள்ளார்.

5. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு!

வரும் (அக்) 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114ஆவது ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கான தங்கக் கவசத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று அணிவித்தார்.

6. ரவுடியுடன் சேர்ந்து சொத்த அபகரிக்க முயன்ற புரோக்கர்: 5 பேர் கைது

40 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை அபகரிக்க, ஆந்திர நபரை அடைத்து வைத்து மிரட்டிய ரவுடி, புரோக்கர் உள்ளிட்ட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

7. மகளின் 'ஹூட்' செயலியை தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த்!

தனது மகள் சௌந்தர்யா தொடங்கியுள்ள ஹூட் எனும் குரல் சார்ந்த சமூக வலைதள செயலியை, நடிகர் ரஜினிகாந்த் நேற்று தொடங்கிவைத்தார்.

8. வெடித்து சிதறிய மர்ம பொருள்: மூன்று சிறுவர்கள் படுகாயம்

மர்ம பொருள் வெடித்ததில் படுகாயமடைந்த மூன்று சிறுவர்களை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

9. Happy Birthday Amala Paul: மனதை மயக்கும் மைனா நாயகி!

மைனா படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஓரிடத்தை பிடித்தவர் அமலாபால்.

10. ரசிகர்களை நோக்கி பாயும் தோட்டா மேகா!

தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகையான மேகா ஆகாஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.