1. அண்ணன் அழகிரியை நினைவுகூர்ந்த ஸ்டாலின்
சென்னை லயோலா கல்லூரியின் வணிக மேலாண்மைப் பிரிவின் (LIBA) புதிய கட்டடத்தைச் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
2. 23 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை தேவை - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
3. பெரியார் குறித்து அவதூறு: யூ-ட்யூபர் கைது
பெரியார், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக யூ-ட்யூபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்
4. உலக வெண்கோல் நாள்: பார்வை மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வுப் பேரணி
திருவொற்றியூரில் மனசாட்சி அறக்கட்டளை விழி இழந்தோர் அமைப்பின் சார்பில் உலக வெண்கோல் நாளை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
5. சிங்கு எல்லையில் படுகொலை: ஒருவர் சரண்; விவசாய அமைப்பு கண்டனம்
வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் சிங்கு எல்லையில் இளைஞர் கொலைக்குப் பொறுப்பேற்று ஒருவர் சரணடைந்துள்ள நிலையில், இந்த வன்முறைச் சம்பவத்திற்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
6. ஒருங்கிணைந்த இந்தியாவை ஒரே கல்லில் காட்டும் பாரத் மந்திர்!
அண்ணல் காந்தி உள்ளிட்ட பலரின் படங்கள் இங்கு பார்வையாளர்களை வரவேற்கும். உலகிலேயே பிரிக்கப்படாத இந்தியாவை வழிபடும் ஒரே இடம் இதுவாகும். விடுதலைப் போராட்டத்தில் பாரத் மந்திரின் பங்களிப்பு அளப்பரியது.
7. கலாம் கனவு கானல் நீரானது ஏன்? - நேர்காணல் வெளியீடு!
அவரது லட்சியக் கனவு நிறைவேற செய்ய வேண்டியவை என்ன? என்பது தொடர்பான நேர்காணல் காணொலி.
8. கரோனா தடுப்பூசி செலுத்துவதில் 70% விரைவில் பெறுவோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கைகளினால், கரோனா தடுப்பூசி செலுத்துவதில், 70 விழுக்காடு என்ற இலக்கினை 10 நாட்களில் அடைவோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
9.மொழி படத்தின் நாயகனுக்கு இன்று பிறந்தநாள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்த முன்னனி நடிகர் பிரித்விராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
10.ஐபிஎல் இறுதிப்போட்டியில் 'ஒத்த ஓட்டு பாஜக' பதாகை!
சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் இறுதிப் போட்டியின்போது ரசிகர் ஒருவர் 'ஒத்த ஓட்டு பாஜக' என எழுதிய பதாகையை வைத்திருந்தார்.