ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @9 AM - Important news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 news @ 9 AM
Top 10 news @ 9 AM
author img

By

Published : Sep 25, 2021, 9:12 AM IST

1. 'storming Operation' - ரவுடிகளை வேட்டையாடிய தமிழ்நாடு காவல்துறை

தமிழ்நாட்டில் ரவுடிகளின் பட்டியலை வைத்து இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு (storming Operation) ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 870 பழைய குற்றவாளிகள் சோதனைக்குட்பட்டு அதில் 450 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

2. ஜிஎஸ்டி கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும் - ஜெயக்குமார்

பள்ளிக்கு செல்லும் மாணவனை போல் ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

3. 'தூத்துக்குடியில் டைடல் பார்க் அறிவிக்கப்படும்' - கனிமொழி

தூத்துக்குடியில் நடைபெற்ற ஏற்றுமதியாளர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அத்தொகுதியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடியில் டைடல் பார்க் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

4. வேலூர் ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை..!

முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு தொடர்புடைய ஆவணங்கள் வேலூர் ஆவின் நிறுவனத்தில் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வேலூர் ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

5. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் மாணவர்கள்

ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

6. தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகள் - சிறுமியை விடுவித்த எஸ்.பி

செஞ்சி அருகே பாலியல் தொல்லை கொடுத்ததால் தந்தையை குத்தி கொலை செய்ததாக அவரது மகள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியை விடுவிக்க விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவிட்டார்.

7. இன்றைய ராசிபலன் - செப்டம்பர் 25

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

8. ஐபிஎல் 2021: ஆர்சிபியை வீழ்த்திய சிஎஸ்கே - புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

9. ஸ்ரீவாரி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இன்று வெளியீடு

திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஸ்ரீவாரி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை இன்று முதல் இணையதளத்தில் வெளியிடுகிறது.

10. ’விலகல் காரணம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்கலாம்...’ - எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்

அதிமுகவில் இருந்து விலகிய காரணம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்கலாம் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.