ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

author img

By

Published : Aug 3, 2021, 9:09 AM IST

TOP 10 NEWS 9 AM
TOP 10 NEWS 9 AM

வூஹானிலிருந்தே கரோனா பரவியது: அமெரிக்க குடியரசு கட்சி

சீனாவில் உள்ள வூகான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி என்னும் ஆய்வகத்தில் மரபணு மாற்றப்பட்ட வைரசிலிருந்து கரோனா தொற்று நோய் உருவானது என அமெரிக்க நாடாளுமன்றத்தைச் சேர்ந்த குடியரசு கட்சியினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமைச்சரவை விரிவாக்கம்: நட்டாவைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சர்

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவைச் சந்தித்து இது குறித்து விவாதித்துள்ளார்.

விவாதமின்றி அரசு பொது இன்சூரன்ஸ் தனியார்மய சட்டத்திருத்தம் - சு. வெங்கடேசன் எம்பி கண்டனம்

அரசு பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயமாக்கும் சட்டத்திருத்தத்தை விவாதமின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தலைதூக்கும் கரோனா: நாளை அமைச்சரவைக் கூட்டம்

நிதிநிலை அறிக்கை, தொழில் முதலீடு, மேகதாது அணை விவகாரம், கரோனா அதிகரிப்பு ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க நாளை (ஆகஸ்ட் 4) தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

முதுமலை அடர்ந்த வனப் பகுதியில் விடப்பட்ட ரிவால்டோ யானை

தமிழ்நாட்டில் முதல் முறையாக மூன்று மாத காலமாக மரக்கூண்டில் அடைத்துவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த காட்டு யானை ரிவால்டோ நேற்று (ஆகஸ்ட் 2) முதுமலையில் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

'என்னை மன்னித்துவிடு பவானி' - உயிரிழந்த தோழியை நினைத்து உருகும் யாஷிகா

நடிகை யாஷிகா ஆனந்த் தனது தோழி கார் விபத்தில் உயிரிழந்தது குறித்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் வருகை : நீலகிரியில் மூன்றடுக்குப் பாதுகாப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நீலகிரிக்கு வருவதையொட்டி மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் - இந்தியா ஹாக்கி அணி போராடி தோல்வி

ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பெல்ஜியம் அணியிடம் 5-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

டெல்டா வகை கரோனாவுக்கு எதிராகச் செயல்படும் கோவாக்சின் தடுப்பூசி

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி டெல்டா பிளஸ் வகை கரோனா தொற்றுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

'யானை-மனித மோதல்' - 3 ஆண்டுகளில் 301 யானைகள் மரணம்

கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் யானை-மனித மோதல் காரணமாக 301 யானைகள் உயிரிழந்துள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.