ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்...

Top 10 news @ 9 AM
Top 10 news @ 9 AM
author img

By

Published : Jul 21, 2021, 8:59 AM IST

1. ரேஷன் கடைகளில் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் அனுமதி இல்லை - கூட்டுறவுத் துறை

நியாயவிலைக் கடைகளில் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே நபர் பணிபுரியவும் வெளிநபர்கள் யாரும் கடைக்குள் செல்லவும் அனுமதி இல்லை எனவும்; அதைமீறி செயல்பட்டால் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

2. இரண்டாம் அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை' - ஒன்றிய அமைச்சர்

கரோனா இரண்டாம் அலையின்போது, நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

3. 'மீன்வள மசோதா 2021' நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டாம் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021-ஐ, நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டாம் எனப் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

4. குமாரசாமியின் ஆட்சியை கவிழ்க்க பெகாசஸ் செயலி மூலம் ஒட்டுக்கேட்பு?

2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

5. தனியார்மயமாகும் வங்கிகள்? - தமிழ்நாடு எம்பிக்கள் மனுவுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்

பொதுத் துறை வங்கிகளில் எவற்றை தனியார்மயமாக்குவது என்பதை அரசு இன்னும் முடிவுசெய்யவில்லை என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

6. வாஜ்பாய், அத்வானி அறை நட்டாவுக்கு ஒதுக்கீடு!

நாடாளுமன்றத்தில் வாஜ்பாய், அத்வானி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட அறை பாஜக தேசியத் தலைவர் ஜெபி நட்டாவுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

7. துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமை புகார்... நடவடிக்கை எடுக்க உத்தரவு

தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் மற்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது அளிக்கப்பட்ட நில அபகரிப்பு மற்றும் சாதிய வன்கொடுமை புகார் குறித்து 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

8. தொட்டால் ஷாக் அடிக்கும் தங்கம் - சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது.

9. IND vs SL: இலங்கையை கதறவிட்ட தீபக் சஹார்; மீண்டும் தொடரை இழந்தது இலங்கை

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தீபக் சஹார் 69 ரன்கள் அடித்து இந்திய அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.

10. சின்ன தளபதி பரத்!

ரசிகர்களால் சின்ன தளபதி என அழைக்கப்படும் பரத் தனது 37ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.