ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 9 AM - விஜய பிரபாகரன்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 News @ 9 AM
Top 10 News @ 9 AM
author img

By

Published : Mar 27, 2021, 9:01 AM IST

இரண்டு விஜயபாஸ்கரையும் டெபாசிட் இழக்க செய்யுங்கள்: கரூரில் ஸ்டாலின் பேச்சு!

கரூர்: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகிய இருவரையும் டெபாசிட் (வைப்புத் தொகை) இழக்கச் செய்யவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கரூர் பரப்புரையில் தெரிவித்தார்.

அஸ்ஸாம் சட்டப்பேரவை தேர்தல்; முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. மக்கள் விறுவிறுப்பாக வரிசையில் நின்று வாக்களித்துவருகின்றனர்.

'காலில் விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன்' - இறைஞ்சும் சரத்குமார்

திருப்பத்தூர்: அனைவரின் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன். ஓட்டுக்கு பணம் மட்டும் வாங்காதீர்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தேர்தல் பரப்புரையின் போது கேட்டுக்கொண்டார்.

பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தால் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது - விஜய பிரபாகரன்

இன்னும் பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்து கொண்டிருந்தால் கடவுளால் கூட மக்களை காப்பாற்ற முடியாது, தேமுதிக - அமமுக கூட்டணிக்கு வாக்களித்தால் மாற்றம் வரும் என்று விஜயபிரபாகரன் பரப்புரையின்போது பேசியுள்ளார்.

ரயில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்; காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு!

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்ணை ஓடிச் சென்று மீட்ட ரயில்வே காவலரை பலரும் பாராட்டினர்.

புதுச்சேரி 'பாமக'வில் பிளவு.. புதிதாக உருவானது 'பா.ம.பே'!
புதுச்சேரி: பாமக முன்னாள் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பாட்டாளி மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

'நீங்கள் பெற்றெடுக்காத பிள்ளை என் தந்தை' - ஆர்பி உதயகுமாரின் மகள்

மதுரை: "நீங்கள் பெற்றெடுக்காத பிள்ளை என் தந்தை, கரோனா காலத்தில் ஓடோடி வந்து உங்களுக்கு உதவியவர்" என்று தேர்தல் பரப்புரையின் போது அமைச்சர் ஆர் பி உதயகுமாரின் மகள் பெருமையுடன் தெரிவித்தார்.

'காங்கிரஸ், திமுகவினருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது' - பொன். ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி: "குமரி துறைமுக விவகாரத்தில் வாதம் செய்ய தயார், விதண்டாவாதமும் செய்யலாம். ஆனால் காங்கிரஸ், திமுகவினருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது" என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

'நட்சத்திரா' - பெயர் வைத்தவுடன் பெற்றோருக்கு கமலின் அறிவுரை

கோவை: தேர்தல் பரப்புரையின் போது, பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க பெண் குழந்தைக்கு கமல்ஹாசன் 'நட்சத்திரா' என்று பெயர் சூட்டினார்.

சென்னையில் தபால் வாக்குகள் பெறும் பணி தொடங்கியது

சென்னை: சென்னையில் உள்ள 7,300 தபால் வாக்குகள் பெறும் பணி மார்ச் 26 முதல் தொடங்கியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.