ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9am - TOP 10

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

காலை 9 மணி செய்திச் சுருக்கம்
காலை 9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Feb 15, 2021, 9:15 AM IST

1. நாட்டில் மூன்றில் ஒருவரிடம் போலி லைசென்ஸ்: ஆதங்கத்தில் போட்டுடைத்த கட்கரி

நாட்டின் 30 விழுக்காடு ஓட்டுநர் உரிமம் போலியானவை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

2. 'விவசாயிகள் பிரச்னைகளைத் தீர்க்காமல் ஒளவையார் பாட்டுப்பாடும் மோடி'

திருவள்ளூர்: தமிழ்நாட்டு மக்களைக் கண்டு மோடி அஞ்சுவதாலேயே சாலை மார்க்கத்தைப் புறக்கணித்து வான்வழியே செல்வதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றஞ்சாட்டினார்.

3. 'ஸ்டாலின் தலைமையில் வளமான தமிழ்நாடு அமைய வேண்டும்'

திருச்சி: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் வளமான தமிழ்நாடு அமைய பாடுபடுவோம் என்று சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது.

4. விருதுநகர் வெடி விபத்து: தமிழ்நாடு வருவாய்த் துறை ஆணையர் ஆலோசனை

விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து குறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

5. மகாராஷ்டிராவில் கோர விபத்து: 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் நிகழ்ந்த கோர விபத்தில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

6. 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்: சென்னை ஐடி ஊழியர்கள் 14 பேர் காயம்

தேனி: கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்த சென்னை ஐடி ஊழியர்களின் வேன் மலைச்சாலையிலுள்ள 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் 14 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

7. 'தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வதுபோல் நாடகமாடும் மோடி' - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

திருச்சி: தமிழ்நாட்டில் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதாகக் கூறி பிரதமர் மோடி அரசியல் நாடகமாடுகிறார் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குற்றஞ்சாட்டியுள்ளது.

8. விஷவாயு தாக்கி உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் - உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்ரம்பாக்கத்தில் தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளி முருகனின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

9. சீகூர் சமவெளியில் யானைகள் வழித்தடத்தில் வசிக்கும் மக்கள் பிரமாண பத்திரம் தாக்கல்

நீலகிரி: சீகூர் சமவெளியில் யானைகள் வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவருபவர்கள் தங்களுக்கான பாதிப்பு குறித்து உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி குழுவிடம் பிரமாண பத்திரங்களாகத் தாக்கல்செய்தனர்.

10. புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கிராம மக்கள் அஞ்சலி

விருதுநகர்: திருச்சுழி அருகே புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவுநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.