1. அதிமுகவில் இணைகிறாரா சசிகலா? மதுரையில் ஓபிஎஸ் பேட்டி
அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பார்கள் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2. தமிழ் திரையுலக மன்னனுக்கு விருது!
நான்கு தசாப்தங்களாக தமிழ்த் திரையுலகை ஆண்டுவரும் ரஜினிகாந்த்திற்கு, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
3. உத்தரப் பிரதேசத்தில் ஒன்பது புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைத்த பிரதமர்
அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாக ஒன்பது மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
4. தேர்தல் அலுவலரை மிரட்டிய விவகாரம்: அதிமுகவை சேர்ந்த 4 பேர் கைது
ஊராட்சி துணைத் தலைவர் மறைமுகத் தேர்தலின்போது தேர்தல் அலுவலரை மிரட்டிய வழக்கில், அதிமுகவை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதுகலை நீட் கவுன்சிலிங் நிறுத்திவைப்பு
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி முதுகலை நீட் கலந்தாய்வை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
6. தமிழ்நாடு அரசின் விருது முதல் தாதா சாகேப் பால்கே விருது வரை ரஜினி!
40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாடு அரசின் விருது முதல் தாதா சாகேப் விருது வரை பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
7. இந்தியாவுக்கான போப் பிரான்சிஸின் பிரதிநிதி தமிழ்நாடு ஆயர்களுக்கு கடிதம்
இந்தியாவுக்கான போப் பிரான்சிஸின் பிரதிநிதி பேராயர் லியோபோல்டோ கிரெல்லி, தமிழ்நாடு ஆயர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அறக்கட்டளையின் நிதி ஆதாரங்களை பங்குதந்தையர்கள் தங்களின் சொந்த நலனுக்காக தாங்களாகவோ, அல்லது மற்றவர்கள் மூலமாகவோ வணிகம் அல்லது வர்த்தகம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
8. இந்து முன்னணி எதிர்ப்பை மீறி 'பெரியாரும் இஸ்லாமும்' நிகழ்ச்சி நடத்த மனோன்மணியம் பல்கலை., முடிவு
மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் 'பெரியாரும் இஸ்லாமும்' நிகழ்ச்சி நடத்த இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும், அதனைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியை நடத்த பல்கலை நிர்வாகம் தயக்கம் காட்டுவதாகவும் ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டது. இதன் விளைவாக, நிகழ்ச்சியை நடத்த பல்கலை நிர்வாகம் இன்று முடிவெடுத்துள்ளது.
9. 'தமிழ் மக்கள் இல்லையென்றால் நான் இல்லை'- டெல்லியில் ஒலித்த தலைவரின் குரல்.!
நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். விழாவில் பேசிய ரஜினிகாந்த், “என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” என்று கூறினார். மேலும், “தாதா சாகேப் விருதை மறைந்த இயக்குனர் கே. பாலசந்தருக்கு சமர்பிக்கிறேன்” என்றும் கூறினார்.
10. 'அவரது கருத்துகள் என்னை புண்படுத்தின' - நடிகர் விஜய்
இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை புண்படுத்தியுள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.