ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7pm

author img

By

Published : Sep 19, 2021, 7:07 PM IST

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 News @ 7 pm
Top 10 News @ 7 pm

1. பஞ்சாப் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு!

பஞ்சாப் முதலமைச்சராக இருந்த அமரீந்தர் சிங் நேற்று ராஜினாமா செய்த நிலையில், அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2. CSK vs MI: பதிலடி கொடுத்து முதல் இடத்திற்கு முன்னேறுமா மஞ்சள் படை!

ஐபிஎல் தொடரின் இரண்டாவது கட்ட போட்டிகள் இன்று தொடங்கும் நிலையில், இன்றைய போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன.

3. கேரளாவில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு

முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

4. மீண்டும் பாமக வந்தால் மகிழ்ச்சி - பாஜக கரு. நாகராஜன்

மீண்டும் அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தால் மகிழ்ச்சி, கூட்டணியின் வெற்றி என்பது முக்கியம். ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே இலக்கு என்று பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

5. தமிழ்நாட்டிலிருந்து பாறைகள் வழங்க வேண்டும் - கேரள அமைச்சர் கோரிக்கை

கேரள அரசு சார்பில் விழிஞம் பகுதியில் கட்டப்படும் சிறு துறைமுகத்திற்கு கன்னியாகுமரியிலிருந்து பாறைகளை எடுத்து செல்வது தொடர்பாக கேரள துறைமுகத்துறை அமைச்சர், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

6. கிஷ்கிந்தா வசம் உள்ள 177 ஏக்கர் நிலம்; கோயிலுக்கு சொந்தமானது - அமைச்சர் சேகர்பாபு

ஜமின் ஒழிப்பு சட்டத்தின்படி, தாம்பரம் கிஷ்கிந்தா வசமுள்ள 177 ஏக்கர் நிலம், பாப்பாசத்திரம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சொந்தமானது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

7. ஆறு வாரங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அவசியம் பின்பற்றுங்கள் - ராதாகிருஷ்ணன்

ஆறு வாரங்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

8. அரசுப் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விபத்து - வெளியான பரபரப்பு சிசிடிவி

சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளி சுற்றுசுவர் இடிந்து விபத்து ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால், நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் எதுவும் இல்லை என அலுவலர்கள் தெரிவித்தனர்.

9. ஆன்லைன் படிவத்தை நிரப்பினால் உங்கள் வீடு பாதுகாக்கப்படும் - வேலூர் ஏ.எஸ்.பியின் புதிய முயற்சி!

கூகுள் படிவம் உதவியுடன் பூட்டப்பட்ட உங்களது வீடுகள் பாதுகாக்கப்படும் என்ற வேலூர் ஏ.எஸ்.பி ஆல்பர்ட் ஜானின் புதிய முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

10. தந்தைக்கு எதிராக நடிகர் விஜய் வழக்கு!

தன் பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், உள்ளிட்ட அவரது அமைப்பு நிர்வாகிகள் 11 பேருக்கு எதிராக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.