1, உலக ஆணழகன் போட்டியில் வெல்ல ஆசை; தமிழ்நாடு அரசிடம் உதவி கோரும் போக்குவரத்து தலைமை காவலர்
உலக ஆணழகன் போட்டியில் வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க விரும்பும் தனக்கு தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல் துறையும் உதவ முன்வர வேண்டுமென போக்குவரத்து தலைமைக் காவலர் புருஷோத்தமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2, 389 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது - முதலமைச்சர் வழங்கினார்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாகப் பணிபுரியும் 389 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.
3, சாவித்திரி பாய் புலே பிறந்த தினத்தில் ஆசிரியர் தினம் கொண்டாட கோரிக்கை!
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பாய் புலே பிறந்த நாளில் ஆசிரியர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
4, சர்வதேச விருதுடன் "சூரரைப் போற்று" சூர்யா - வைரலாகும் வீடியோ!
சூரரைப் போற்று படத்திற்காக பெற்ற விருதை நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகாவுடன் பிரித்து பார்க்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
5, ’சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லாதது வேதனையளிக்கிறது’ - நீதியரசர்கள் கவலை!
”சிறப்புக் குழந்தைகளை சிறந்த முறையில் ஆளாக்குகின்ற வல்லமை சிறப்புப் பள்ளி ஆசிரியர்களைவிட வேறு யாருக்கும் கிடையாது. ஆனால், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்பது வேதனையளிக்கிறது” என நீதியரசர்கள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளார்.
6, 14 ஆண்டுகளுக்குப் பின் முதலமைச்சர் படம் இல்லாத ராதாகிருஷ்ணன் விருது சான்றிதழ்!
ஆசிரியர் தினத்தை ஒட்டி இன்று (செப்.05) வழங்கப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கான ராதாகிருஷ்ணன் விருது சான்றிதழில் முதலமைச்சர் படம் இடம்பெறவில்லை.
7, விலங்குகளை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம், யானையை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.
8, பொது சொத்தை காக்க வஉசி பிறந்தநாளில் சபதம் ஏற்போம்!
ஆசிரியர் தினம், வஉசி 150ஆவது பிறந்த நாளில் தேசத்தின் பொது சொத்தைக் காக்க சபதம் ஏற்போம் என பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தி உள்ளது.
9, விநாயகர் சதுர்த்தி விழா - தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு அனுமதிக்காவிட்டால் பாஜக சார்பில் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் வீடுகள் முன்பாக வைத்து வழிபடுவோம் என்று மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10, ” 2024இல் பாஜக மட்டும்தான் இந்தியாவில் இருக்கும்”
2024 தேர்தலுக்கு பின் இந்தியாவில் ஒற்றை கட்சி ஆட்சிதான் இருக்கும் அதான் பிஜேபி ஆட்சி என வழக்கறிஞர் பிரிவு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.