ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 7 pm
காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM
author img

By

Published : Apr 4, 2021, 6:58 AM IST

எலக்ஷன் - ''கமிஷன்" என ராகுல் ட்வீட்!

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சூசகமாகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் இணைந்தார் சேந்தமங்கலம் அமமுக வேட்பாளர்

சேந்தமங்கலம் அமமுக வேட்பாளர் பி. சந்திரன் அதிமுகவில் இணைந்தார்.

செல்பி ஸ்பாட்டுக்கு காங்கேயம் காளையுடன் சென்ற திமுக வேட்பாளர்!

திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி காங்கேயன் காளையை அழைத்துச் சென்று பொதுமக்களிடம் செல்பி எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

அதிமுக வேட்பாளரிடம் சாமி ஆடி கோரிக்கைவைத்த பெண்

திருவள்ளூர் அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணா வாக்குச் சேகரிக்க கொட்டையூர் கிராமத்திற்குச் சென்றபோது பெண் ஒருவர் திடீரென சாமியாடி ஊருக்கு கோயில் கட்டித்தர வேண்டுமென கூறினார்.

’வென்றாலும், தோற்றாலும் எனது மரணம் தாராபுரம் மண்ணில்தான்’ - எல். முருகன்

வென்றாலும், தோற்றாலும் எனது மரணம் தாராபுரம் மண்ணில்தான் எனத் தாராபுரம் தனித் தொகுதியின் பாஜக வேட்பாளரும் மாநிலத் தலைவருமான எல். முருகன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள்கள் டாஸ்மாக் விடுமுறை: வழக்கமான விற்பனை!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மதுபானக் கடைகள் நாளை முதல் (ஏப். 4) மூன்று நாள்களுக்கு மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், அரசியல் கட்சி தொண்டர்களும், மதுப் பிரியர்களும் இன்று (ஏப். 3) அதிகளவில் மதுப் பாட்டில்களை வாங்கிச் சென்றனர் என டாஸ்மாக் வட்டாரங்களில் பேசப்பட்ட நிலையில், வழக்கமான விற்பனைதான் நடைபெற்றது என தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் நன்றி கடிதம்!

கரோனா காலத்திலும், அதற்குப் பிறகும் கடுமையாக பணியாற்றி, இந்திய ரயில்வேயின் வளர்ச்சியில் பங்கு கொண்ட ஒவ்வொரு ரயில்வே ஊழியருக்கும் நன்றி தெரிவித்து, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கடிதம் அனுப்பியுள்ளார்.

சக வேட்பாளர்களுக்கு கமல் ஹாசன் கடிதம்!

கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் நடைபெறவிருக்கும் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அமைதியாகவும் நிகழ வேண்டும் என சக வேட்பாளர்களுக்கு கமல் ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

ஓட்டேரியில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

ஓட்டேரியில் அடையாளம் தெரியாத நபர்களால் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சென்னையில் 2 கோடி ரூபாய் மோசடி: டெல்லியைச் சேர்ந்த 6 பேர் கைது

லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி இரண்டு கோடியே 13 லட்சம் ரூபாயை மோசடிசெய்த டெல்லியைச் சேர்ந்த ஆறு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.