ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - corona updates in tamil

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 7 PM
Top 10 news @ 7 PM
author img

By

Published : Jul 1, 2020, 7:07 PM IST

எல்ஐசி பங்குகளை விற்பது சுயசார்பு இந்தியாவுக்கு எதிரானது - எல்ஐசி ஊழியர்கள் சங்கம்

டெல்லி: எல்ஐசியின் பங்குகளை விற்பது ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு எதிரானது, அந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என எல்ஐசி ஊழியர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

இனி விபத்துகள் நடக்காது என்பதை அனல்மின் நிலையம் உறுதி செய்யவேண்டும்- ஸ்டாலின்

சென்னை: நெய்வேலி அனல்மின் நிலையம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை உறுதி செய்வதுடன், இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காது என்பதை உறுதி செய்யவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் திட்டத்திற்காக பிரதமருக்கு நன்றி கூறிய பாஸ்வான்!

டெல்லி: நாட்டு மக்களின் கஷ்டங்களை உணர்ந்து ஆட்சி செய்யும் பிரதமர் மோடியை நன்றியோடு வணங்குகிறேன் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

அவதிக்குள்ளாகும் பிரதமர் தொகுதி நெசவாளர்கள்: குரல் கொடுக்கும் பிரியங்கா காந்தி

டெல்லி: ஊரடங்கின் காரணமாக அவதிக்குள்ளாகியுள்ள பிரதமர் மோடி தொகுதியின் நெசவாளர்களுக்கு உதவி தொகை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

சாத்தான்குளம் லாக்கப் மரணம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

விசாரணை அறிக்கை, உடற்கூறாய்வு அறிக்கை, மருத்துவ சிகிச்சைப் பதிவு, மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை, உடல் பரிசோதனை அறிக்கை அகியவற்றை ஆறு வாரங்களுக்குள் சமர்பிக்க தமிழ்நாடு காவல் இயக்குநர், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொலை முயற்சி, நில ஆக்கிரமிப்பு - சாத்தான்குளம் காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய கிரிமினல் ஸ்ரீதர்

சாத்தான்குளம் சிறை சித்ரவதையால் ஜெயராஜ், பென்னிக்ஸ் எனும் வணிகர்கள் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்து தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீதர் குறித்து பல அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பங்குச் சந்தை தாக்குதலுக்கும் எங்களுக்கு தொடர்பில்லை - பலுச் விடுதலைப் படை

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பங்குச் சந்தை மீதான தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பலுச் விடுதலைப் படையின் செய்தித் தொடர்பாளர் அசாத் பலுச் கூறியுள்ளார்.

'அப்பாவி மக்களை வேட்டையாடும் சில ஓநாய்களும் காவல்துறையில் உள்ளன' - இயக்குநர் பாரதிராஜா

சென்னை: அப்பாவி மக்களை வேட்டையாடும் சில ஓநாய்களும் காவல்துறையில் கலந்திருப்பதாக, சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் சரிவுக்கு பின் ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை

தொடர்ந்து இரண்டு நாள்களாக சரிவைச் சந்தித்துவந்த இந்திய பங்குச் சந்தை, சர்வதேச பங்குச் சந்தைகளின் எதிரொலியாக இன்று ஏற்றம் கண்டுள்ளது.

ஆடு மேய்ப்பவருக்கு கரோனா - தனிமைப்படுத்தப்பட்ட ஆடுகள்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆடு மேய்க்கும் ஒருவருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரது ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.