ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

author img

By

Published : Jun 30, 2020, 7:02 PM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @7PM
Top 10 news @7PM

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்தியாவுக்கு துணை நிற்கும் பிரான்ஸ்!

பாரிஸ் : இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்தில் இந்தியாவுடன் துணை நிற்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

வீட்டில் இருந்துகொண்டே டயாலிஸிஸ் செய்யலாம் - புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை.

புதுக்கோட்டை : கரோனா காலத்தில் சிறுநீரக கோளாரால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு வீட்டிலிருந்தே டயாலிஸிஸ் செய்துகொள்ளும் முறையை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை அறிமுகம் செய்துள்ளது.

'தரவுகள் பொய் சொல்வதில்லை; மக்களை ஏமாற்ற வேண்டாம்' - மோடியைச் சாடிய ராகுல்

டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிப்போம் எனக் கூறிக்கொண்டே, மோடி தலைமையிலான அரசு ஏராளமான சீனப் பொருள்களை இறக்குமதி செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

'கரோனா மருந்து விலை மலிவாக இருக்க வேண்டும்' - பிரதமர் மோடி

டெல்லி: கரோனாவுக்கான மருந்து விலை மலிவாகவும், அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடையும் விதமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கரோனா கட்டுப்பாட்டு அறை: 1.47 லட்சம் பேர் பயன்!

சென்னை: கரோனா வைரஸ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையின் மூலம் இதுவரை 1.47 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்

விழுப்புரம் சிறுமி எரித்துக்கொலை: குண்டர் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: விழுப்புரம் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், குண்டர் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிய சொன்ன பெண் ஊழியரை மூர்க்கமாகத் தாக்கியவர் கைது!

நெல்லூர்: முகக்கவசம் அணியச் சொன்ன பெண் ஊழியரை சரமாரியாகத் தாக்கிய ஹோட்டல் துணை மேலாளர் பாஸ்கரை ஆந்திர மாநிலக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

மேற்கு வங்க பள்ளிகளில் கரோனா குறித்த பாடம்

கொல்கத்தா: கரோனா குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மேற்கு வங்க பள்ளிகளில், அடுத்த ஆண்டு முதல் பாடத்திட்டம் அறிமுகம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

டிக் டாக் தடை இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் - சாக்ஷி அகர்வால்

சீனா செயலிகளுக்குத் தடைவிதித்த மத்திய அரசிற்கு நடிகை சாக்ஷி அகர்வால் நன்றி தெரிவித்துள்ளார்.

'கேப்டன்சிக்காக எனது ஆட்டத்தை மாற்றப்போவதில்லை' - பென் ஸ்டோக்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் கேப்டனாக செயல்பட்டாலும், விளையாட்டு அணுகுமுறையை மாற்ற மாட்டேன் என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.