ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - தமிழ்நாடு செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7PM

author img

By

Published : Jun 9, 2020, 7:00 PM IST

1.எத்தியோப்பியாவில் வாழும் மற்றொரு பென்னிகுவிக்...

வாழ்ந்து மறைந்தவர்கள் மட்டுமே வழிகாட்டிகளல்ல... வாழ்ந்து கொண்டிருக்கும் பலரும் வழிகாட்டிகளாகவே வாழ்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டிருக்கும் ஒரு நபர்தான் பேராசிரியர் கண்ணன் அம்பலம். எத்தியோப்பியா மண்ணில் நீர் மேலாண்மையை ஏற்படுத்தி குளிரச் செய்யும் பொந்துகம்பட்டி மைந்தனின் கதை.

2.இட ஒதுக்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் அதிமுக மனு

டெல்லி: மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

3.பரோலில் சென்ற கைதிகளை மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் பரோல் முடிந்த கைதிகளை மீண்டும் சிறையில் அடைக்க தனிமைப்படுத்தும் சிறப்பு வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், கைதிகளின் பரோலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 15க்குள் அனைவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

4.கிழக்கு லடாக் விவகாரம்: இரு நாடுகளும் எல்லை வகுப்பது அவசியம்!

ஹைதராபாத்: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லையை தெளிவாக வரையறுக்க வேண்டியது அவசியம். இரு நாடுகளுக்கிடையில் ஒரு தெளிவான எல்லை நிர்ணயம் செய்யப்படாவிட்டால் மோதலை ஒருபோதும் தீர்க்க முடியாது.

5.கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் - அரசாணை வெளியீடு!

சென்னை: ஜூன் 5ஆம் தேதி வரை கரோனா பாதிப்பு அதிகமுள்ள 316 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

6.பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் என்னென்ன ?

அரபிக் கடல் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக சூறாவளிகள் அதிகரித்து வருகின்றன. வெப்ப புயல்கள், அமேசான் காடுகளில் தீ, பயிர் அழிக்கும் வெட்டுக்கிளி கூட்டம் போன்றவை அதிகரித்து வருவது பருவநிலை மாற்றத்தின் விளைவுகளே. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அரசாங்கங்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லாவிட்டால், நம் எதிர்கால தலைமுறையினர் வாழ முடியாது என்பதே நிதர்சனம். இது தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

7.கறுப்பின பாதிரியார்களின் கால்களைக் கழுவிய அமெரிக்க காவலர்கள்

வாஷிங்டன்: ஜார்ஜ் ஃப்ளாய்டின் மறைவுக்கு தங்களது வருத்தத்தைப் பதிவுசெய்யும் விதமாக, அமெரிக்காவின் நார்த் கரோலினா பகுதி காவலர்கள் அங்குள்ள கறுப்பின பாதிரியார்களின் கால்களைக் கழுவியுள்ளனர்.

8.கரோனா: ராணுவத்தை வரவழைக்க கோரும் எம்.பி.,

கன்னியாகுமரி: கரோனா ஒழிப்பு பணியில் ராணுவத்தை ஈடுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

9.'தலைவன் இருக்கின்றான்' அப்டேட் : ரசிகர்களை சந்திக்கவுள்ள உலக நாயகன், ஆஸ்கர் நாயகன்!

'தலைவன் இருக்கின்றான்' படம் குறித்து கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து விரைவில் சமூக வலைதளங்களில் பேச உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

10.கரோனாவால் பாதிக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு நிதி திரட்டும் ஏடிபி

கரோனாவால் பாதிக்கப்பட்ட டென்னிஸ் பயிற்சியாளர்களுக்கு உதவும் நோக்கில் ஏடிபி டென்னிஸ் நிர்வாகம் சார்பாக நிதி திரட்டும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.