1. 'மோடி அமைச்சர்களை மாற்றியதற்கு பதிலாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' - கே.பாலகிருஷ்ணன்
மோடி அரசு திறம்பட செயல்பட்டிருந்தால் கரோனாவை முதல் அலையிலேயே கட்டுப்படுத்தியிருக்கலாம், இதற்கெல்லாம் முழு பொறுப்பேற்க வேண்டியவர் மோடியே, இதற்கு பதிலாக மோடி பதவியை ராஜினாமா செய்திருந்தால் அது சரியாக இருந்திருக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக உணவுத்துறை அமைச்சர் அறிக்கை!
எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பற்றி குறைகூறி ஒரு அறிக்கையை வெளியிட்ட நிலையில் பதிலளிக்கும் விதமாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
3. அரியர் தேர்வு முடிவு வெளியீடு சிக்கல்களுக்கு தீர்வு வேண்டும் - மனோன்மணியம் பல்கலை மாணவர்கள் கோரிக்கை
மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், ஆன்லைன் மூலம் எழுதிய அரியர் தேர்வு முடிவு வெளியீட்டில் உள்ள சிக்கல்களை களைய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. விரைவில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு - பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன், நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும், இ-பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் 2 ஆயிரத்து 500 மரங்கள் பாதுகாக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
5. அமாவாசை கூட்டம்: பண்ணாரி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா பரிசோதனை
பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
6. சட்டப்பேரவை முன்பு தர்ணா - சமூக ஆர்வலரால் பரபரப்பு!
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு சமூக ஆர்வலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
7. ‘ஒன்றிய அரசு குருடாகவும், செவிடாகவும் உள்ளது’- மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம்
உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ரத்து செய்யக்கோரி புதுச்சேரியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசை செவிடு, குருடு என மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் குற்றம்சட்டினார்.
8. எல்லாருக்கும் 1 லட்சம் ரூபாய்... கரோனா போனஸ் அறிவித்த மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கரோனா போனஸ் தொகை அறிவித்துள்ளது.
9. பனவடலிசத்திரம் அருகே ஓட்டுநர் உயிரிழப்பு: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மறியல்
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஓட்டுநரின் உறவினர்கள், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.
10. லால் சிங் சத்தா படப்பிடிப்பில் நாக சைதன்யா
லடாக்கில் நடைபெறும் லால் சிங் சத்தா படப்பிடிப்பில் நடிகர் நாக சைதன்யா கலந்துகொண்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.