ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @ 7 AM

ஈ டிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 16, 2021, 7:14 AM IST

Updated : Jun 16, 2021, 7:33 AM IST

1. கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்கள்

2ஆம் தவணை கரோனா சிறப்பு நிவாரண நிதி, 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தொழில் துறை அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.

2. மீனாட்சி கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி திருக்கோயிலில் பொன்னூஞ்சல் ஆடி அருளும் மாலிருஞ்சோலை உற்சவம் ஜூன் 15 மாலை தொடங்கியது.

3. மூன்றாம் அலை: கரோனா வைரசை தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி!

திருநெல்வேலி: கோவிட் தடுப்பு மருந்து, கோவிட்டுக்கு பிந்தைய மேலாண்மை குறித்த இணைய கருத்தரங்கை திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரியுடன் இணைந்து, இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் மக்கள் தொடர்பு கள அலுவலகம் ஜூன் 15ஆம் தேதி காலை நடத்தியது.

4. 27 மாவட்டங்களில் 50 விழுக்காடு பயணிகளுடன் பேருந்துகள் இயக்கம்?

சென்னை: கரோனா தொற்றுப் பரவல் குறைவாக இருக்கும் மாவட்டங்களில் 50 விழுக்காடு பயணிகளுடன் ஜூன் 21ஆம் தேதிக்குப் பின் நகரப் பேருந்து சேவை இயக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

5. 'பராசக்தி ஹீரோடா' - சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகும்'சிவாஜி தி பாஸ்'

சென்னை: இயக்குநர் ஷங்கர் - ரஜினி கூட்டணியில் வெளியான சிவாஜி படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவானதையடுத்து ரசிகர்கள் அதனை சமூக வலைதளத்தில் கொண்டாடிவருகின்றனர்.

6. ’பப்ஜி’ மதன் மீது அதிகரிக்கும் ஆன்லைன் புகார்கள்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுமா?

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 159 ஆன்லைன் புகார்கள் பப்ஜி மதன் மீது வந்துள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது. இதனால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

7. போலி மருத்துவர்களிடம் சிகிச்சை... கரோனா உயிரிழப்பு அதிகரிப்பு - வேளாண் துறை அமைச்சர்

கடலூர்: கிராமங்களில் மக்கள் போலி மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்றுக்கொண்டதால்தான் கரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

8. மாஞ்சா கயிற்றால் விபரீதம்: கழுத்தில் நூல் அறுத்து காயம்

இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் கழுத்தில், எங்கிருந்தோ வந்த மாஞ்சா கயிறு அறுத்து காயம் ஏற்பட்டது.

9. ’இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே’- புதிய அவதாரத்தில் தமன்னா

நடிகை தமன்னா முதல்முறையாக தொலைக்காட்சி தொகுப்பாளினியாகக் களமிறங்கியுள்ளார்.

10. தனியாளாக குளம்வெட்டிய ஃபாகு!

உங்களுக்கெல்லாம் பிகாரின் தஷ்ரத் மாஞ்சியின் கதை நினைவு இருக்கிறதுதானே. ஒரு நாள் அவரின் மனைவி பிரசவ வலியால் துடித்தார். அவளால் நடக்கக்கூட முடியவில்லை.

Last Updated : Jun 16, 2021, 7:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.