1 இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டினால்தான் விவசாயத்தை காக்க முடியும்- பத்மஸ்ரீ பாப்பம்மாள்
இன்றைய இளைஞர்கள் படித்துவிட்டு வெளி நாடுகள் செல்ல ஆர்வம் காட்டுவதை விட விவசாயத்தில் ஆர்வம் காட்டினால் மட்டுமே விவசாயத்தை பாதுகாக்க முடியம் எனப் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள 105 வயது பாப்பம்மாள் தெரிவித்துள்ளார்.
2 ஏழு வயதில் 150 மொபைல் ஆப்கள்: சாதனை சிறுவனாக வலம் வரும் வெங்கட்
ஏழே வயதில் 150 மொபைல் ஆப்களை உருவாக்கி உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் சாதனை மாணவர் வெங்கட். எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் என விரும்பும் அச்சிறுவன் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
3 கிராம சபைக் கூட்டங்களின் முக்கியத்துவம் என்ன? - தன்னாட்சி அமைப்பின் செயலர் பிரத்யேக நேர்காணல்
கிராம சபைக் கூட்டங்களின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கிறார், தன்னாட்சி அமைப்பின் பொதுச் செயலர், நந்தகுமார். அவரது நேர்காணல் அடங்கிய முழுக்காணொலி
4 செங்கோட்டையை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள்: காவல்துறையினர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்
டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியதால், தலைநகரமே போர்க்களமாக காட்சியளித்தது. இந்தப் பேரணியில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையினரையும் சரமாறியாக தாக்கத் தொடங்கினர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவிவருகிறது.
5 பாமகவின் தேர்தல் கூட்டணி கணக்கு என்ன?
கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாமக இன்னும் முடிவெடுக்காத நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணி இன்னும் இறுதி வடிவம் பெறாமல் இழுபறி ஏற்பட்டுள்ளது.
6 'தமிழ்நாடு நலன்களுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்' - திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாட்டின் நலனுக்காகப் பாடுபடுவதோடு, தமிழ்நாட்டு மக்களின் பிரச்னைகளை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஆக்கப்பூர்வமாக எதிரொலித்து தமிழ்நாடு நலன்களுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
7 செங்கோட்டையில் உயர பறக்க வேண்டியது மூவர்ண கொடியே...விவசாயிகள் பேரணி குறித்து சசி தரூர்
டெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையில் முடிவடைந்ததை கண்டித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், செங்கோட்டையில் உயர பறக்க வேண்டியது மூவர்ண கொடியே என தெரிவித்துள்ளார்.
8 'ஆள்மாறாட்டம் செய்தாலும் 12 காளைகளைப் பிடித்தவர் கண்ணன்தான்' - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழப்பத்திற்குத் தீர்வு!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை வென்ற விராட்டிபத்து கண்ணன், ஆள்மாறாட்டம் செய்தாலும் அவரே 12 காளைகளையும் பிடித்தவர் என்பது தகுந்த வீடியோ ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டுள்ளதால், கண்ணனுக்கே முதல் பரிசுக்குரிய கார் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
9 எந்தப் பிரச்னைக்கும் வன்முறை தீர்வல்ல... விவசாயிகள் போராட்டம் குறித்து ராகுல் காந்தி!
டெல்லி: விவசாயிகள் பேரணியில் வன்முறை வெடித்த நிலையில், எந்தப் பிரச்னைக்கும் வன்முறை தீர்வல்ல என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
10 மம்தா பானர்ஜிக்கு டாடா காட்டிய மற்றொரு எம்எல்ஏ!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பிரபீர் கோஷல் அக்கட்சியிலிருந்து விலகினார். இவர் உத்தர்பரா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார்.