ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - corona updates in tamil

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 5PM
Top 10 news @ 5PM
author img

By

Published : Jul 4, 2020, 5:00 PM IST

இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை - ஜூலை 6ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்த இளம் வழக்கறிஞர்களுக்கான மாதம் 3,000 உதவித்தொகை பெற ஜூன் 6ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பார் கவுன்சில் அறிவித்துள்ளது

வெளியே சுற்றுபவர்கள் மீது குற்ற வழக்கு - ஆட்சியர் எச்சரிக்கை

பெரம்பலூர்: முழு ஊரடங்கு நாளை (ஜூலை 5) கடைபிடிக்கப்படுவதால் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்ற நடவடிக்கை' - ஐஜி சங்கர்

தூத்துகுடி: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

'எத்தனை இழப்புகள் வந்தாலும் சீனாவின் உறவை கைவிட மாட்டோம்' - இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: நாட்டின் வளர்ச்சிக்காக சீனா, பாகிஸ்தான் பொருளாதார முற்றம் (சிபிஇசி) திட்டத்தை எத்தனை இழப்புகள் வந்தாலும் நிறைவேற்றுவோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சூளுரைத்துள்ளார்.

கொட்டும் மழை: சாலையில் கிடந்த கரோனாவால் உயிரிழந்தவரின் உடல்!

பெங்களூரு: கரோனாவால் உயிரிழந்த 63 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் சாலையில் மூன்று மணி நேரம் கிடந்த அவலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரோனா எதிர்ப்பு போரில் ஜெ. அன்பழகனை இழந்தோம் - மு.க. ஸ்டாலின்

சென்னை: கரோனா எதிர்ப்பு போரில் ஜெ. அன்பழகனை இழந்தோம் என்று கூறும் அளவிற்கு அவர் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

’குழந்தை மனது நோகக்கூடாதுனு இப்படி செஞ்சேன்’- நெகிழ வைக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்!

திருவள்ளூர்: குழந்தை என்னிடம் வந்து ’எங்க வீட்ல தண்ணீர் வரல’ என மழலைக் குரலில் கேட்டபோது மனது என்னவோ போல் ஆகிவிட்டது. வளரும் குழந்தையின் மனதில் ஏமாற்றம் ஏற்படக்கூடாது என்பதற்காக குடிநீர் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டேன் என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத் மெல்லிய புன்னகையுடன்...

’என் மாடி வீடு பிரியங்கா காந்திக்குதான்’ - வாரணாசி காங்கிரஸ் தொண்டர் அதிரடி!

லக்னோ: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வசிப்பதற்காக தனது இரண்டு மாடி வீட்டை தருவதாக வாரணாசியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பூனீத் குமார் என்பவர் அறிவித்துள்ளார்.

மின் கட்டணம் ஏழைகளை மிரட்டுகிறது - சேரன்

வேலையின்றி வீட்டிற்கு உணவிற்குத் தேவையான பணம் சம்பாதிக்கவே கஷ்டப்படும் சூழலில், மின் கட்டணம் ஏழைகளை மிரட்டுகிறது என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங் புதிய சட்டத்தின் கீழ் கைதான முதல் நபர்

சீனாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வாசகங்களைக் கொண்ட கொடியை வைத்திருந்த நபரை ஹாங்காங் காவலர்கள் கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.