ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 5 PM - ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்...

top 10 news at 5 pm
top 10 news at 5 pm
author img

By

Published : Nov 30, 2021, 5:19 PM IST

1. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் நிவாரண உதவி வழங்கல்

கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

2. கடும் பணிச்சுமை: மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரிக்கை

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனடியாக நடத்திட மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

3. ஆட்டோ ஓட்டுநர் மகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை

கர்நாடகா மாநிலத்தில் வேளாண் பல்கலைக்கழத்தில் ஆட்டோ ஓட்டுநரின் மகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

4. Tomato Price hike: தக்காளி லாரிகளுக்கு இடம் ஒதுக்காத அலுவலர்களுக்கு கண்டனம்

நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்காத சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

5. அசத்தலான ஸ்டைலிஷ் உடையால் சோஷியல் மீடியாவில் ஹிட் அடித்த பிரியங்கா - நிக் ஜோடி!

மூன்றாம் ஆண்டு திருமண நாளை விரைவில் கொண்டாடவிருக்கும் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் ஜோடி, ஃபேஷன் விழாவில் கலந்துகொண்டு அசத்திய ஸ்டைலிஷ் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

6. டெல்டா தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் கோவிஷீல்டு - சர்வதேச ஆய்வில் தகவல்

டெல்டா வகை கோவிட்-19 தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக லான்செட் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.

7. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் விவகாரம் - இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க முடிவு!

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க உள்ளதாக புதுச்சேரி அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

8. மகாராஷ்டிராவில் பொதுவெளியில் திரையிடப்பட்ட 'ஜெய் பீம்'

மகாராஷ்டிரா மாநிலத்தில் 'ஜெய் பீம்' திரைப்படம் பொதுவெளியில் மக்களுக்காகத் திரையிடப்பட்டது.

9. பெட்ரோலுடன் நீர் கலந்து விற்பனை: திருவள்ளூரில் பரபரப்பு

திருவள்ளூரில் பெட்ரோலுடன் நீர் கலந்துவந்ததாகப் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள், காரில் பெட்ரோல் போட்டவர்கள் தனியார் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

10. 142 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை - ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

முல்லைப் பெரியாறு அணை தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக 142 அடியை எட்டியது. இதனால் தேனி திண்டுக்கல் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.