ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 News @ 5 PM
Top 10 News @ 5 PM
author img

By

Published : Nov 7, 2021, 5:49 PM IST

1. சென்னை பெருவெள்ளம்: விமானங்கள் தாமதம்; பயணிகள் அவதி!

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் 14 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன.

2. தாம்பரம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீர் - பொதுமக்கள் அவதி

தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தேங்கியுள்ள மழை நீரை சுகாதாரத்துறைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து மழை நீரை உடனடியாக வெளியேற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

3. மழை வெள்ள பாதிப்பில் மக்களுடன் ஸ்டாலின்!

நேற்றிரவில் இருந்து பெய்துவரும் கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஓட்டேரி பாலம், பாடி, பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆகிய பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு அவர்களுடன் இன்று பார்வையிட்டார்.

4. சென்னைவாசிகள் கவனத்திற்கு - அடுத்த 24 மணி நேரத்துக்கு கன முதல் அதி கனமழை!

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை முதல் அதி கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5. பிரபல ஆட்சியாளர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்

ஒவ்வொரு நாடுகளில் உள்ள ஆட்சியாளர்களை குறித்தும் 'மார்னிங் கன்சல்ட்' என்ற பகுப்பாய்வு நிறுவனம் ஆய்வு நடத்தி, தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2000-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய பகுப்பாய்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரபல ஆட்சியாளர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

6. பொதுமக்கள் முக்கிய ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்துப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

7. முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுக மீது மக்கள் அதிருப்தி - செல்லூர் ராஜு

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை திறந்துவிட்ட விவகாரத்தில் திமுக அரசின் மீது தமிழ்நாடு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

8. அறையின் உள்புறம் தாழிட்டு சிக்கிக்கொண்ட 1 வயது குழந்தை பத்திரமாக மீட்பு

விளையாடுகையில் அறையின் உள்புறம் தாழிட்டு சிக்கிக் கொண்ட ஒன்றரை வயது குழந்தையை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டனர்.

9. சென்னை பெருமழை: அம்பத்தூரை துவம்சம் செய்த விடா மழை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு (நவம்பர் 6) முதல் பெய்துவரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

10. பாஜக தேசிய செயற்குழு கூட்டம் - தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

டெல்லியில் உள்ள என்.டி.எம்.சி மையத்தில் வைத்து பாஜக செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்குத் தொடங்கிய கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தொடக்க உரையாற்றினார். மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.