ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM - TAMILNADU NEWS

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

TOP 10 NEWS AT 5 PM
TOP 10 NEWS AT 5 PM
author img

By

Published : Oct 4, 2021, 5:28 PM IST

1.கைதை கண்டித்து பிரியங்கா காந்தி உண்ணாவிரதம்

உத்தரப் பிரதேச காவல்துறையினர் பிரியங்கா காந்தியை கைது செய்துள்ள நிலையில், கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.

2.பொறியியல் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு - தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவு!

பொறியியல் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

3.டி20 உலகக்கோப்பை தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி

டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் மைதானங்களில் 70 விழுக்காடு இருக்கைகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது.

4.மதுரையில் குழந்தைகள் விற்பனை வழக்கு - காப்பகத்தின் உதவியாளருக்குப் பிணை

மதுரையில் சட்டவிரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த வழக்கில், காப்பகத்தின் உதவியாளர் மதர் ஷாவுக்குப் பிணை வழங்கி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

5.காவல்துறைக்கு முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் - முதலமைச்சர் தொடங்கிவைப்பு

காவல்துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் இன்று (அக்.4) தொடங்கிவைத்தார்.

6.கலவர பூமியான லக்கிம்பூர் கேரி - நான்கு கம்பெனி படையினர் குவிப்பு

வேளாண் சட்ட போராட்டம் காரணமாக போர்க்களமாகக் காட்சியளிக்கும் லக்கிம்பூர் கேரி பகுதியில் நான்கு கம்பெனி சிஏபிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

7.'100 நாள் பணித்திட்டத்தொழிலாளர்களை பனை நடவு செய்யும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்'- திருவாரூர் விவசாயிகள்

பனைமரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க, 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களை பனை விதை நடவு செய்யும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

8.மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ள வேண்டும் - சமந்தா ஸ்டோரி

சமந்தா-நாக சைதன்யா ஜோடி பிரிந்ததாக அறிவித்துள்ள நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ட்ரீம் & அலெக் பெஞ்சமின் எழுதிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

9.அரசுன் இரண்டாம் ஆண்டு: சமூகவலைதளங்களில் கொண்டாடிய ரசிகர்கள்

தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை அவரது ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

10.பிரியங்கா காந்தி கைது: புதுச்சேரியில் நாராயணசாமி போராட்டம்

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.