ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM

author img

By

Published : Oct 3, 2021, 5:09 PM IST

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

வீரபாண்டி ராஜாவின் உடல் நல்லடக்கம்!

மாரடைப்பால் உயிரிழந்த திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வீரபாண்டி ராஜாவின் உடல், அவரது சொந்த நிலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடத்தின் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

பவானிபூர் இடைத்தேர்தல் - அசுர வேட்டையாடிய மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம் மாநிலம் பவானிபூரில் நடந்த இடைத்தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றிபெற்றார்.

நாட்டின் சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் - குலாம் நபி ஆசாத் புகழாரம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைப் போலவே அவரது மகன் ஸ்டாலின் இருப்பதாகவும், நாட்டின் சிறந்த முதலமைச்சராக அவர் திகழ்வதாகவும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

’மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை’

காஞ்சிபுரம்: மக்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்கான எந்தத் தேர்தல் வாக்குறுதியையும் திராவிட முன்னேற்றக் கழகம் நிறைவேற்றவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

கப்பலில் உல்லாச போதை விருந்து - ஷாருக்கான் மகன் உள்பட 13 பேர் கைது!

மும்பை அருகே நடுக்கடலில் சுற்றுப்பயணம் சென்ற உல்லாச கப்பலில் பயணிகள் போல மாறுவேடத்தில் சென்று போதை தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உள்பட 13 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.

ஜனநாயகக் கடமையாற்றிய பிரதமரின் தாய்!

குஜராத்தின் காந்திநகர் மாநகராட்சியின் 44 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் 99 வயதான தாய் ஹிராபா, ராய்சானில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.

RCB vs PBKS: பெங்களூரு பேட்டிங்; பஞ்சாப் அணியில் 3 மாற்றங்கள்

பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.

'ஐ... காட்டிருவோமா.... வாங்க, வந்து பாருங்க...' - பிக் பாஸ் சீசன் 5!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, இன்று மாலை ஆறு மணிக்கு பிரம்மாண்டமாகத் தொடங்கவுள்ளது.

தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரத்தைச் சேகரிக்கும் பள்ளிக் கல்வித் துறை

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் பள்ளிக் கல்வித் துறை ஈடுபட்டுவருகிறது.

ஆசிரியரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மாணவர்கள் - நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

மாற்றுத்திறனாளி ஆசிரியர் பாடம் நடத்தும்போது மூன்று மாணவர்கள் நடனமாடி அநாகரிகமாக நடந்துகொண்ட காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலான நிலையில், அம்மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.