ETV Bharat / state

மாலை 5 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 5 PM - 5 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top-10-news-at-5-pm
top-10-news-at-5-pm
author img

By

Published : Oct 2, 2021, 5:06 PM IST

1. உசிலம்பட்டி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க. ஸ்டாலின்

உசிலம்பட்டி பாப்பாபட்டி கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் திமுக அரசில் நிச்சயம் நிறைவேற்றப்படும்” என உறுதியளித்துள்ளார்.

2. ஆட்கொல்லி புலியை சுட்டுப் பிடிக்க குவிந்த அதிடிப்படை!

மசினகுடியில் பலரைக் கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவையடுத்து, மொத்தம் 20 பேர் கொண்ட ஐந்து குழுக்கள் அடங்கிய அதிரடிப்படையினர் ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.

3. 'As I am attending Valagappu' - பிடிஆரை கலாய்த்த முன்னாள் 'கலகல' அமைச்சர்!

'As I am attending Valagappu' என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலாய்த்துள்ளார்.

4. லாரி சர்வீஸ் உரிமையாளர் வெட்டிப் படுகொலை!

விருதுநகரில் லாரி சர்வீஸ் நடத்திவரும் பால்பாண்டி என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

5. பணவீக்க இடர் - கிலோ உப்பு 130 ரூபாய்!

இந்திய-சீன எல்லையில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பல கிராமங்களில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

6. நாட்டுக்கோழி வளர்ப்பில் மோசடி: சகோதரர்களுக்கு 10 ஆண்டு சிறை

நாட்டுக்கோழி வளர்ப்பில் மோசடி செய்த சகோதரர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை முதலீட்டாளர் நலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7. ஊழல் சமுதாயத்தை கரையான்போல் செல்லரித்துவிட்டது - சென்னை உயர் நீதிமன்றம்

ஊழல் தனது வேர்களைப் பரப்பி சமுதாயத்தைக் கரையான்போல் செல்லரிக்கச் செய்துவிட்டதாகச் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

8. விமர்சனங்களைப் பெரிதும் மதிப்பவன் நான் - பிரதமர் மோடி

நல்ல நோக்கத்துடன் கூடிய விமர்சனங்களை மனமார வரவேற்பவன் நான் எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

9. அவரவர் சொந்த வழியைத் தொடரப் போகிறோம் - சமந்தா

சமந்தா, நாக சைதன்யா ஜோடி தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளது.

10. IPL 2021 MI vs DC: டாஸ் வென்ற ரிஷப் பந்துவீச முடிவு

மும்பை - டெல்லி அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.