ETV Bharat / state

மாலை 5 மணி செய்தி சுருக்கம் Top 10 News @ 5 PM - Top 10 News

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-5-pm
top-10-news-at-5-pm
author img

By

Published : Sep 23, 2021, 5:08 PM IST

1. ‘மண்ணையும் மக்களையும் காப்பதில் சளைக்காத ஆட்சி திமுக’ - ஸ்டாலின்

மண்ணையும் மக்களையும் காப்பதில் எப்போதும் யாருக்கும் சளைக்காத ஆட்சிதான் திமுக ஆட்சி, இதைவிட வேகமான ஆட்சி இந்தியாவில் இருக்க முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2. சசிகலாவுக்குச் சொந்தமான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து

சென்னையை அடுத்த பனையூரில் சாலை விரிவாக்கத்திற்காக சசிகலாவுக்குச் சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3. மாணவிக்கு கத்திக்குத்து: காதலன் தற்கொலை முயற்சி

கல்லூரி மாணவியை ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த காதலன் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

4. நெல்லையில் வேட்புமனு பரிசீலனை தொடக்கம்

திருநெல்வேலியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டுவருகிறது.

5. ராஜ்யசபா எம்பிக்களாக திமுக வேட்பாளர்கள் இருவர் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.

6. 'அக். 2 கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவதை உறுதி செய்யுங்கள்!'

அக்டோபர் 2 அன்று கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

7. பெங்களூரில் குண்டு வெடிப்பு - மூவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்

கர்நாடக மாநிலம் பெங்களூர் சாம்ராஜ்பேட்டை அருகே ஸ்ரீ பத்திரகாளியம்மன் லாரி சர்விஸ் குடோன் இயங்கி வந்தது. இந்த கட்டடத்தில் இன்று (செப்.23) குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

8. கிறிஸ்துமஸ் விடுமுறையைக் குறிவைத்த டொவினோ தாமஸ்

நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள, 'மின்னல் முரளி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

9.நலம் நலமறிய ஆவல்... கடிதம் வெறும் காகிதம் இல்லை உணர்வு குவியல்

மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் இப்படி ஒரு வரி எழுதியிருப்பார், “நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக அதில் மிதந்தேனே அன்பே நானும் படகாக”. ஆம், கடித வரிகள் அதனை படிக்கும் நபரை எழுதியவரின் நினைவுகளில் மிதக்க செய்யும்.

10.மகனுடன் ரஜினியை எதிர்க்கும் சீயான் விக்ரம்

ரஜினியின் அண்ணாத்த படத்துடன் விக்ரமின் மகான் திரைப்படம் தீபாவளி ரேஸில் மோதவுள்ளதாக கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.