ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 5 pm - சென்னை மாவட்ட செய்திகள்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 17, 2021, 5:01 PM IST

1. உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம்: நடவடிக்கை எடுக்க ஆணையம் உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம் விடப்படுவதாகத் தகவல் வெளியான நிலையில், நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2. ஒவ்வொருவருக்கும் 1 கிலோ மீன்கள் இலவசம் - மோடி பிறந்த நாள் ஸ்பெஷல்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடும்விதமாக தண்டையார்பேட்டையில் பொதுமக்களுக்கு ஒரு கிலோ மீன்கள் வீதம் 710 பேருக்கு வழங்கப்பட்டன.

3. 'இடஒதுக்கீடு முதல் அனைத்திலும் பெரியாரின் கொள்கைப்படியே நடக்கும் அதிமுக'

பெரியாரின் புகழைப் போற்றும்விதமாக, அதிமுக இட ஒதுக்கீடு முதல் அனைத்திலும் அவர் கொள்கைப்படியே நடக்கின்றது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

4. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

5. பிரதமர் மோடி பிறந்த நாள்: ஸ்டாலின், இபிஎஸ் வாழ்த்து

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

6. சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாகாமல் இருக்க அரசு விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தல்

அரசு நிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாகாமல் இருக்க தமிழ்நாடு அரசும், மாநகராட்சியும் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

7. அடடே தங்கம் விலை! - இரட்டிப்பு மகிழ்வில் வாடிக்கையாளர்கள்

தங்கம் விலை தொடர் சரிவால் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது.

8. டிக் டாக் திவ்யா கைது: ரசிகர்கள் அதிர்ச்சி

டிக் டாக்கில் பிரபலமான திவ்யா மற்றொரு டிக் டாக் பிரபலம் குறித்து அவதூறு பரப்பியதால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

9. வழக்கறிஞரிடமிருந்து ரூ.1 லட்சம் பறித்துச் சென்ற குரங்கு

உத்தரப் பிரதேசத்தில் குறும்புக்கார குரங்கு ஒன்று வழக்கறிஞரின் பையிலிருந்து ஒரு லட்சம் ரூபாயைப் பறித்துக்கொண்டு மரத்தில் ஏறியது. பின்னர் அந்தப் பணத்தை காற்றில் வீசியது. இந்தச் சம்பவத்தின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

10. கரோனா பரவல்: அடுத்த 3 மாதங்கள் முக்கியமானவை என எச்சரிக்கை

இந்தியாவில் அடுத்த மூன்று மாதங்களில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.