ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5 pm - 5 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்தி சுருக்கம்.

5 மணி செய்தி சுருக்கம்
5 மணி செய்தி சுருக்கம்
author img

By

Published : Sep 15, 2021, 5:12 PM IST

1. அதிவேகமாகச் சென்ற கார் மோதி தூக்கி வீசப்பட்ட பாதசாரி: பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

அதிவேகமாகச் சென்ற கார் மோதி தூக்கி வீசப்பட்ட பாதசாரி, சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2. நாமும் நமது உறுதியற்ற நிலைப்பாடுகளுமே மாணவர்கள் மரணங்களுக்கு காரணம் - பா. ரஞ்சித்

நீட் தேர்வு அச்சத்தால் நிகழும் மாணவர்கள் மரணங்கள் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

3. நீட் மரணம் - மேலும் ஒரு மாணவி தற்கொலை

காட்பாடியை அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா (17) தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீட் தேர்வு எழுதிய பின், இரண்டு நாள்களாக மாணவி விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மதிப்பெண் குறைந்துவிடும் என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்துள்ளது.

4. ’நேரடி வகுப்புக்கு வர கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்குச் செல்ல தடை கோரப்பட்ட வழக்கில், மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் பள்ளிகளின் விவரங்களைத் தெரிவித்தால், அப்பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. இது மோடி தந்த பணம்: அடம்பிடித்ததால் மோசடி வழக்கில் சிறை சென்ற நபர்!

வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட பணத்தை, பிரதமர் மோடி தந்த பணம் எனக் கூறி திருப்பித் தர மறுத்த நபரை, காவல் துறையினர் மோசடி வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

6. கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்!

கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

7. உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. நாளை (செப் 16) முதல் இரண்டு நாட்களுக்கு தேமுதிக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது

8. இந்தாண்டும் டெல்லியில் பட்டாசுக்கு தடை - கெஜ்ரிவால் கெடுபிடி

தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும், அதை வெடிக்கவும் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

9. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று (செப். 15) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

10. 7.5% இட ஒதுக்கீடு: தரவரிசைப் பட்டியல் வெளியீட்டில் குழப்பம்

7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்காக சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்தும் தரவரிசைப் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறவில்லை என மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.