ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 5 pm - etv bharat

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்.

மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 30, 2021, 5:28 PM IST

1. ரூ.477 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.477.42 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

2. தொடர் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!

கோயம்புத்தூரில் தொடர்ந்து செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களைத் திருடி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

3. எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்காக கட்டப்பட்ட விடுதிக் கட்டடங்களை திறந்துவைத்த ஸ்டாலின்

ஆதிதிராவிடர் மாணவர்கள், பணிபுரியும் மகளிருக்காக ரூ. 10.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

4. பிரதமர், ஸ்மிருதி ராணியை தவறாக சித்தரித்த யூடியூப் சேனல்- நடவடிக்கை கோரும் பாஜக

பிரதமர், ஒன்றிய அமைச்சரின் பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் யூ-டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுத்து அந்த யூ-டியூப் சேனலை முடக்க வலியுறுத்தி பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

5. காரைக்குடியில் புதிய நினைவு பரிசு விற்பனையகம் - முதலமைச்சர் திறந்து வைத்தார்

ஒருங்கிணைந்த கைத்தறி வளர்ச்சிக் குழும திட்டத்தின் கீழ், விருதுநகர் மாபெரும் கைத்தறி குழும திட்டத்தின் வாயிலாக காரைக்குடியில் ரூ. 1.38 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நினைவு பரிசு விற்பனையகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

6. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட அரசாணையை நிறைவேற்ற கோரிக்கை

அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர் மருத்துவர் எஸ். பெருமாள் பிள்ளை தமிழ்நாடு முதலமைச்சருக்கு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை நிறைவேற்ற வேண்டுகிறோம். அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்கிட உடனடியாக ஆணையை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

7. காவலரை கடத்திய கும்பல் - கூகுள் பே மூலம் ரூ.1 லட்சம் திருட்டு

சென்னையில் தலைமை காவலரை காரில் கடத்தி கூகுள் பே மூலம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிய கும்பலை காவல் துறையினர், தீவிரமாக தேடி வருகின்றனர்.

8. 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வீட்டு காவலாளி கைது

சென்னையில், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த வீட்டு காவலாளியை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

9. கூட்டணி கட்சி எம்எல்ஏ-க்களை எதிர்க்கட்சியாக கருதக்கூடாது - உயர் நீதிமன்றத்தில் மனு

திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் எட்டு பேரை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக கருதக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10. மேற்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 6 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 30) லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.