ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்.

மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 25, 2021, 5:20 PM IST

1 மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% ஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது - உயர் நீதிமன்றம்

மருத்துவப் படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27 விழுக்காடு இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

2 விவசாயக்கடன் 5% உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

விவசாயக்கடன் 5% உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

3 விஜயகாந்த் பிறந்தநாள் - தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து!

நடிகர் விஜயகாந்தின் 69-வது பிறந்தநாளை ஒட்டி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

4 கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு - திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், எனவே புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் மு.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

5 அங்கன்வாடி திறப்பு - முன் பணம் வழங்க கோரிக்கை

அங்கன்வாடிகள் திறப்பதற்கு முன்பு தேவையான பொருள்கள் வாங்க முன் பணம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என சமூகநலத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

6 கே.டி. ராகவன் விவகாரம் - பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம்

கே.டி. ராகவன் விவகாரத்தல் காணொலி வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் பாஜகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

7 குடும்பத்துடன் எளியமுறையில் பிறந்தநாள் கொண்டாட்டம்... ட்விட்டரில் பகிர்ந்த விஜயகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், சாலி கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் தன் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

8 பொது விநியோகத்திட்ட மானியமாக ரூ. 400 கோடி ரூபாய் விடுவிப்பு!

கூட்டுறவு நிறுவனங்களுக்கு பொது விநியோகத் திட்ட மானியமாக தமிழ்நாடு அரசால் 2020-21 ஆண்டிற்கு ரூ.400 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

9 விவேக் மரணத்தில் திருப்பம்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்பு

நடிகர் விவேக் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாதால் உயிரிழந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

10 3.38 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கல்!

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், 3 லட்சத்து 38 ஆயிரத்து 512 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.