ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 5 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்.

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Aug 24, 2021, 5:15 PM IST

1. சுழற்சி முறையில் வகுப்புகள் எப்படி நடக்கும்?

மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதா அல்லது ஆன்-லைன் வழியில் கல்வி கற்பதா என்பது குறித்து அவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

2. உள்நாட்டு விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், உள்நாட்டு விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

3. பொறியியல் சேர்க்கை: விளையாட்டு வீரர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியீடு!

பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்திருந்த விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி நாளை ரேண்டம் எண் வெளியிடப்படும் என தொழில் நுட்பக் கல்வி இயக்குனர் லெஷ்மி பிரபா தெரிவித்துள்ளார்.

4. வடமாநில இளைஞர்கள் 100 பேர் மோதல் - 10 பேர் படுகாயம்

கோயம்புத்தூரில் இயங்கி வரும் பஞ்சு ஆலையில் பணிபுரியும் வடமாநில இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

5. மானிய ஸ்கூட்டர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வானதி சீனிவாசன் கோரிக்கை!

பெண்களுக்கு இறக்கைகளாக மாறியுள்ள இருசக்கர வாகன திட்டத்தை தமிழ்நாடு அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

6. முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை - 8 பேர் கைது

வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக ஒருவரை வெட்டிக் கொலை செய்த எட்டு பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

7. சென்னையில் நில அதிர்வு - மக்கள் அதிர்ச்சி!

சென்னையிலிருந்து வடகிழக்கில் 320 கி.மீ. தொலையில் வங்கக்கடலில் 10 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனை தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் உறுதிசெய்தது.

8. தங்கம், வெள்ளி விலை உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 35 ஆயிரத்து 880 ஆக விற்பனையாகிறது.

9. கே.டி.ராகவன் விவகாரம் - அண்ணாமலை சொல்வது என்ன?

கே.டி.ராகவன் குறித்த சர்ச்சை காணொலி பிரச்னையை சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

10. இன்று 5 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு

தமிழ்நாட்டில் இன்று ஐந்து லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.