’பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் மீதான நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு’ - முதலமைச்சர் உத்தரவு
சென்னை: சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் மீதான நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்பிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில், ஒன்பது பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளித்திட உயர் அலுவலர்கள் பரிந்துரை
சென்னை: ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முதலமைச்சரிடம் உயர் அலுவலர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
'தனியார் பார்களைத் திறக்கும் முடிவை கைவிடுக' - அன்புமணி
வருவாயைப் பெருக்குவதற்காக தனியார் பார்களைத் திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஏழைகளுக்கான நிலங்களில் மணல் குவாரி இயங்க அனுமதித்தது எப்படி - நீதிமன்றம் கேள்வி
ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் தனியாருக்கு மணல் குவாரி நடத்த அனுமதி வழங்கியது எப்படி என கேள்வியெழுப்பியுள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, இதுகுறித்து துறை சார்ந்த அலுவலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் 100 நாள் வேலை கேட்டு பெண்கள் தர்ணா
ராமநாதபுரத்தில் 100 நாள் திட்டத்தின் மூலம் வேலை வழங்கவில்லை என பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உரிமங்கள் நீட்டிப்பு
தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உரிமங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
'இந்தியாவின் ஆளுமையை நிலைநாட்ட தமிழ் ஈழம் அமைக்க வேண்டும்' பிரதமருக்கு வைகோ கடிதம்!
உலக வரைபடத்தில், இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்கள் ஆக்கியது போல், வங்கதேசம் என்ற நாட்டை இந்தியா ஆக்கியது போல், தமிழ் ஈழம் என்ற நாட்டை அமைப்பதற்கு, ஐ.நா.மன்றத்தின் மேற்பார்வையில், உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி வாழும் ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சிகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
அரசு முறை பயணம்: குவைத் சென்றார் அமைச்சர் ஜெய்சங்கர்!
இந்தியா-குவைத் உறவை வலுப்படுத்தும் விதமாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குவைத் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜூன் 14-இல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூன் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
தடுப்பூசி இறக்குமதி: ஒன்றிய அரசு மீது டி.ஆர்.பாலு எம்.பி குற்றச்சாட்டு
சென்னை: தடுப்பூசி இறக்குமதி தொடர்பாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.