ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm - news @ 5 pm

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 5 pm
Top 10 news @ 5 pm
author img

By

Published : Nov 16, 2020, 5:00 PM IST

1. ஏழாவது முறை பிகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்குமார்

ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார் ஏழாவது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்றார்.

2. சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணையை நாளை தொடங்கவுள்ள நீதிபதி கலையரசன்!

அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன், தனது விசாரணையை நாளை முதல் தொடங்குகிறார்.

3. சென்னை வரைவு வாக்காளர் பட்டியல்: ஆண்களை விடவும் அதிக எண்ணிக்கையில் பெண் வாக்காளர்கள்!

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டபேரவை தேர்தல் நடைபெறயுள்ள நிலையில், சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளிட்டுள்ளார். இதில், ஆண் வாக்காளர்களை விட எண்ணிக்கையில் பெண் வாக்காளர்கள அதிகளவில் இடம்பெற்றுள்ளனர்.

4. பட்டியலில் சேர்க்கப்படாத 60 ஆயிரம் வாக்காளர்கள்- விழுப்புரம் ஆட்சியர்

மாவட்டத்தில் 18 முதல் 19 வயது வரையிலான புதிய வாக்காளர்கள் 60 ஆயிரம் பேர் பட்டியலில் சேராமல் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

5. நாங்கள் கட்சி தொடங்கினால் திமுக தோல்வியைத் தழுவும் - அழகிரி ஆதரவாளர்

எங்களுக்கு கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் கிடையாது. ஆனால் நாங்கள் கட்சி தொடங்க நேரிட்டால் திமுக பல்வேறு இடங்களில் தோல்வியைத் தழுவும் என மு.க. அழகிரி ஆதரவாளர் மன்னன் கூறியுள்ளார்.

6. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு?

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வினை சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பின்னர் நடத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

7. ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட 4 சிறுவர்கள் மீட்பு. சிறுமியை தேடும் பணி தீவிரம்!

காசிமேடு கடலில் குளிக்கச் சென்ற ஐந்து பேர் அலையில் சிக்கிய நிலையில் நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஒருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

8. "ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது" - ஒபாமா

அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்ததை ட்ரம்ப் ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

9. அட என்ன ஒரு ஒற்றுமை 'கொலை வெறிக்கும் - ரெளவுடி பேபிக்கும்' - தனுஷின் 'பில்லியன்' ட்வீட்

தனுஷ் - சாய் பல்லவி நடனத்தில் உருவான 'ரெளடி பேபி' பாடல் யூ- டியூப்பில் 1 பில்லியன் பேர் பார்த்த முதல் தென்னிந்திய பாடல் என்னும் புதிய சாதனையை படைத்துள்ளது.

10. ஜனவரியில் சையத் முஷ்டாக் அலி டிராபி; ஐபிஎல் ஏலம் காரணமா?

ஐபிஎல் ஏலத்தை மனதில் கொண்டு வரும் ஜனவரி மாதத்தில் உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி தொடர் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.