ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 5 pm
Top 10 news @ 5 pm
author img

By

Published : Sep 30, 2020, 5:44 PM IST

இந்து முன்னணி ராம கோபாலன் காலமானார்

இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் ராம கோபாலன் இன்று காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னைப் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

வீடு புகுந்து மிரட்டி பணம், நகை பறிப்பு - கந்துவட்டி அட்ராசிட்டி: ஆட்சியரிடம் பெண் புகார்

கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினருடன் பெண் புகார் மனு அளித்தார்.

ஐபிஎல் 2020: நேருக்கு நேர்...! ஆர்ஆர் vs கேகேஆர்!

ஐபிஎல் தொடரில் இன்று (செப்.30) நடைபெறவுள்ள 12ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

நாட்டின் நடப்பு உபரித் தொகை உயர்வு - ரிசர்வ் வங்கி தகவல்

நாட்டின் நடப்புக் கணக்கின் உபரித் தொகை 3.9 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அரியர் தேர்வுகள் ரத்து: அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் எதிர்ப்பு!

அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

’நாளை செய்தியாளர்களை சந்திக்கிறேன்’ - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நாளை செய்தியாளர்களை சந்தித்துப் பேச உள்ளார்.

'அக்.7 அதிமுக, முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வாய்ப்பில்லை' - நயினார் நாகேந்திரன் ஆரூடம்

அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வாய்ப்பில்லை என்றும், இந்த அறிவிப்பு தள்ளிப்போகும் என்றும் மாநில பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

'மிஸ் சென்னை' வென்ற புகைப்படத்தை பதிவிட்ட த்ரிஷா

'மிஸ் சென்னை' பட்டம் வென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரஞ்சு ஓபன் : தொடரிலிருந்து விலகிய செரீனா!

உலகின் முன்னணி நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், காயம் காரணமாக பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை

கோரிமேடு பகுதியில், இன்று (செப்.30) காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் கவுன்சிலர் சுந்தர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.