ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்...

top-10-news-at-5-pm
top-10-news-at-5-pm
author img

By

Published : Sep 29, 2020, 5:20 PM IST

பாஜக - சிவசேனா மூத்த தலைவர்கள் ரகசிய சந்திப்பு !

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் இடையிலான சந்திப்பு அம்மாநில அரசியலில் மீண்டும் சர்ச்சையை கிளம்புயுள்ளது.

அக்.5 முதல் 2ஜி வழக்கு மீண்டும் விசாரணை

2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து வரும் அக்.5ஆம் தேதி முதல் வழக்கு தினசரி விசாரணைக்கு வரவுள்ளது.

ஈபிஎஸ் உடனான கூட்டத்தை புறக்கணித்து ஓபிஎஸ் திடீர் ஆலோசனை!

அரசு நிகழ்ச்சியை புறக்கணித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்!

மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து சரியான வழிகாட்டுதல்கள் வந்தபின்னர் தான் திரையரங்குகள் திறப்பு தொடர்பாக முடிவெடுக்கப்படும் என, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோமுகி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

கோமுகி நதி அணையிலிருந்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைக்களுக்கு எதிராக லட்சுமி விலாஸ் வங்கி செயல்படுகிறதா?

ரிசர்வ் வங்கி விதிகளுக்கு மாறாக செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கியை நிர்வகிக்க புதிய நிர்வாகிகள் நியமிக்க கோரிய மனு தொடர்பாக, மத்திய நிதியமைச்சகம், செபி ஆகியவைப் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் பொது மக்களுக்கு அனுமதி? அரசு பதிலளிக்க உத்தரவு!

கரோனா ஊரடங்கிற்குப் பின் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும்நிலையில், மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொது மக்களை அனுமதிப்பதா? வேண்டாமா? என, தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலூர், கீழையூர் பெரியார் வைகை கால்வாயை இடிக்கத் தடை: அக். 7இல் இறுதி தீர்ப்பு

மேலூர், கீழையூர் பகுதியிலுள்ள பெரியார் வைகை கால்வாயினை இடிக்கத் தடை கோரிய வழக்கில் கால்வாயை இடிக்க இடைக்காலத் தடைவிதித்து வழக்கின் இறுதித் தீர்ப்பை அக். 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

”செயற்குழுவில் பூகம்பம் வெடிக்கும் என்றெண்ணிய திமுகவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது” - அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக செயற்குழுவில் பூகம்பம் வெடிக்கும், அதில் குளிர் காயலாம் என்று நினைத்த திமுகவுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

ஐபிஎல் 2020: நேருக்கு நேர்...! டெல்லி vs ஹைதராபாத்

ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறவுள்ள 11ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.