ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - தலைப்பு செய்திகள்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news  @ 5 pm
Top 10 news @ 5 pm
author img

By

Published : Sep 24, 2020, 5:25 PM IST

  • செப்.29 இல் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29 ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொது முடக்கத்தில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்துகிறார்.

  • பஞ்சாபில் உச்சத்தை தொடும் உழவர் போராட்டம்: தொடர் ரயில் மறியல் இன்று தொடக்கம்!

சண்டிகர்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்ட முன்வடிவுகளைக் கண்டித்து கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு அறிவித்த ரயில் மறியல் போராட்டம் இன்று தொடங்கியது.

  • 'தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே!' - அவசர சட்டம் இயற்ற பாமக வலியுறுத்தல்!

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காட்டையும், அரசு வேலைகளில் 100 விழுக்காட்டையும் தமிழர்களுக்கே வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

  • அதிமுக அரசை பாராட்ட பிரதமருக்கு என்ன நிர்பந்தம்? - மு.க. ஸ்டாலின்

சென்னை: கரோனா தடுப்புச் சாதனங்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழலை விசாரிக்க மத்திய உளவுத் துறை மூலம் ஒரு ரகசிய விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • பெரியார் பல்கலை. ஆன்லைன் தேர்வில் குளறுபடி: மாணவர்கள் தவிப்பு

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் குளறுபடி ஏற்பட்டதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

  • சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு

சேலம்: அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியர் பணிக்கு நேரில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • பணம் நெருக்கடி: பிள்ளைகளை கொலைசெய்த தந்தை கைது!

சென்னை மதுரவாயலில் பணம் நெருக்கடி காரணமாக பெற்ற பிள்ளைகளை கொலைசெய்த தந்தையை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

  • திருமணம் செய்து கொண்டது துரதிர்ஷ்டவசமான முடிவு - பூனம் பாண்டே

பனாஜி: நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம் என்று நம்பி திருமணம் செய்துகொண்டது துரதிர்ஷ்டவசமானது என பூனம் பாண்டே கூறியுள்ளார்.

  • பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் காலமானார்...!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிரபல வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார்.

  • ஐபிஎல் 2020: நேருக்கு நேர்...! கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆறாவது லீக் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.