ETV Bharat / state

5 மணிச் செய்தி சுருக்கம் top 10 news@ 5 PM - JULY 15

ஈடிவி பாரத்தின் 5 மணிச் செய்தி சுருக்கம்

Top 10 news @ 5 PM
Top 10 news @ 5 PM
author img

By

Published : Jul 15, 2021, 5:13 PM IST

1. மேகதாது விவகாரம்: பிரதமரை சந்தித்கும் கர்நாடக முதலமைச்சர்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.

2. கேட்டதோ நீட் விலக்கு; கிடைத்ததோ 4 நீட் தேர்வு மையங்கள்...!

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்தச் சந்திப்பிற்குப் பிறகு, தமிழ்நாட்டில் கூடுதலாக நான்கு நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

3. 'சங்கரய்யா ஒரு நூற்றாண்டின் செயற்பாட்டாளர்' - சீதாராம் யெச்சூரி

முதுபெரும் தலைவர் சங்கரய்யா ஒரு நூற்றாண்டின் செயற்பாட்டாளராக இருந்துள்ளார் என சிபிஎம் அகில இந்தியச் செயலாளர் சீதாரம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

4. 'நிர்பயா திட்டம்: பேருந்துகளில் சிசிடிவி கேமரா' - ராஜகண்ணப்பன்

நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் 2 ஆயிரத்து 500 பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

5. 'நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்' - கமல் ஹாசன்

தான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும் என மநீம கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். ஆசியாவின் முதல் நடுநிலையான கட்சி மநீம என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

6. விரைவில் தமிழ்நாட்டில் 180 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பாஜக மாறும் - அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை அவரின் சொந்த மாவட்டமான கரூரில் 'பாஜகவின் அரசியல் வித்தியாசமாக இருக்கும். தமிழ்நாட்டில் 180 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பாஜக மாறும்' என்று பேசினார்.

7. கீழடி: கொண்டையுடன் கூடிய அழகிய பெண் சிற்பம் - அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட்

கீழடி அருகே அகரம் அகழாய்வில், கொண்டையுடன் கூடிய அழகிய பெண் உருவம் கொண்ட மண்ணால் ஆன சுதைச் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை 'இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ள தமிழ் மகள்' என அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் பொங்க ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

8. #மீண்டும்நேசமணி- கமல் ஹாசனையும் விட்டு வைக்காத வடிவேலு ரசிகர்கள்

கமல் ஹாசனின் 'விக்ரம்' பட போஸ்டரை வடிவேலு ரசிகர்கள் அதே பாணியில் மறு உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

9. ’8 தோட்டாக்கள்’ பட நடிகரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

’8 தோட்டாக்கள்’ பட பிரபலம் வெற்றி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை.15) பூஜையுடன் தொடங்கியது.

10. ஆல்பம் பாடல் உருவாக்கி வெளியிட்ட 'ரேனிகுண்டா' நிஷாந்த்

'ரேனிகுண்டா' பட பிரபலம் நிஷாந்த், தனது நண்பர்களோடு இணைந்து உருவாக்கியுள்ள, 'வீக் எண்ட்' பாடல் சோனி மியூசிக்கில் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.