114 கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டடம்: முதலமைச்சர் அடிக்கல்
சென்னை: 114 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
'மறுஉத்தரவு வரும்வரை மதுரையில் குவாரி தொடங்க அனுமதி வழங்கக்கூடாது'- உயர் நீதிமன்றம்
சென்னை: நீதிமன்ற மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரை மாவட்டத்தில் புதிய இடங்களில் கிரானைட் குவாரிகளை தொடங்க புதிய உரிமம் வழங்க கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா விதிகளை பின்பற்றாத அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை: ஆளுங்கட்சி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கும், மாநகராட்சிக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரின் வீட்டில் கணக்கில் வராத ரூ. 62 லட்சம் பறிமுதல்
நாகை: மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் 62 லட்ச ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
'இந்தியாவுக்கு எதிரான சக்திகளால் ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு' - பாதுகாப்பு துறை இணை அமைச்சர்!
டெல்லி: இந்தியாவுக்கு எதிரான படைகள், சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்த அனுமதிக்ககூடாது என பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார்.
வரும் 19இல் மேற்கு வங்கம் செல்லும் அமித் ஷா!
டெல்லி: பாஜக மூத்தத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா டிசம்பர் 19ஆம் தேதி மேற்கு வங்கத்திற்குச் செல்கிறார்.
பசுவதை தடைச் சட்டம்: பிரதமரின் சகோதரர் வாழ்த்து
பெங்களூரு: பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டுவந்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எகிப்து வந்தடைந்த சீனாவின் கரோனா தடுப்பூசி மருந்து!
கெய்ரோ: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பரிசோதிக்கப்பட்ட சீனாவின் சினோபார்ம் கரோனா தடுப்பூசி மருந்து, இன்று எகிப்துக்கு வந்தடைந்தது.
கரோனா தடுப்பு மருந்து விநியோகம் - களத்தில் இறங்கிய ஸ்பைஸ்ஜெட்
மும்பை: நாடு முழுவதும் கரோனா தடுப்பு மருந்தை விநியோகிக்க ஓம் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்துடன் ஸ்பைஸ்ஜெட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மார்க் ஆண்டனி எனும் மகா நடிகன் - ரகுவரன் பிறந்த தினம் இன்று!
வில்லன் என்றால் காட்டுத்தனமாக கத்த வேண்டும், முரட்டு லுங்கி, அழுக்குப் பனியன், கடா மீசை, கையில் பாட்டில், வாயில் புகை என்ற செட்டப்புக்குள் வராத ஒரே வில்லன் ரகுவரன் மட்டுமே. கோட்சூட் அணிந்து ஹைடெக் வில்லனாக வலம் வந்து சாதித்தவர் ரகுவரன் மட்டுமே.