ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3pm - சென்னை மாவட்ட செய்திகள்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @3PM
Top 10 news @3PM
author img

By

Published : Jun 10, 2020, 3:07 PM IST

'கட்சிக்கொடியை 3 நாள்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடுக' - திமுக

ஜெ. அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள கழக அலுவலகங்களில் கட்சிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

சட்ட நகலை எரிக்கலாமா? விவசாயியை குண்டுக்கட்டாகத் தூக்கிய காவல்துறை!

திருச்சி: சட்ட நகலை எரிக்க முயன்ற விவசாயியை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனாவால் இந்தியா இழந்த முதல் எம்எல்ஏ

சென்னை: ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை முன்னின்று செயல்படுத்தி வந்த ஜெ. அன்பழகன், நாட்டில் கரோனா தொற்றால் காலமான முதல் எம்எல்ஏ ஆவார்.

கோவிட்-19 அச்சுறுத்தல் : நீரிழிவு நோயாளிகளை அதிகமாக பாதிக்கிறது - புதிய ஆய்வு!

பிட்ஸ்பெர்க் : கரோனா வைரஸின் தாக்கம் நீரிழிவு நோயாளிகளை ஏன் அதிகமாக பாதிக்கிறது என்பது குறித்து அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பிட்ஸ்பெர்க் மருத்துவப் பல்கலைக்கழகம் ஆய்வொன்றை நடத்தியுள்ளது.

ஆசிய பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் : முதல் 100 இடங்களுக்குள் எட்டு இந்திய கல்வி நிறுவனங்கள்!

டெல்லி : ஆசிய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 2020ஆம் ஆண்டிற்கான கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த எட்டு கல்வி நிறுவனங்கள் முதல் 100 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

தட்டவேண்டாம்... சொன்னால் போதும்! வீட்டிற்குப் பொருட்கள் வந்துவிடும் - ஃபிளிப்கார்ட்

ஃபிளிப்கார்ட் இணையப் பல்பொருள் அங்காடியான 'சூப்பர் மார்ட்' பயனர்களின் வசதிக்காக ஒலி உதவியாளர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் குரல் ஒலியைக் கொண்டு, பயனர்கள் ஆர்டர்களைப் பதிவுசெய்ய முடியும். முதலில் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில், இந்த வசதியைப் பயனர்களுக்கு ஃபிளிப்கார்ட் அளிக்கிறது.

இந்தியாவுக்கு ஸ்கெட்ச் போடும் நேபாளத்தின் புதிய மேப்!

காத்மாண்டு : நேபாள நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய எல்லைச் சட்டத்திற்கான வரைவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தென்கொரியாவுடனான தொடர்பைத் துண்டித்த வடகொரியா!

சியோல்: தென்கொரியாவுடனான அனைத்துத் தொடர்பு வழிகளையும் முற்றிலுமாக மூடுவதாக வடகொரியா அறிவித்துள்ளது.

‘ஆன்லைன் கல்வியை ஒழுங்குபடுத்த ஏதாவது நிரந்தர திட்டம் உள்ளதா?’

சென்னை: ஆன்லைன் கல்வியை ஒழுங்குபடுத்த ஏதாவது நிரந்தர திட்டம் உள்ளதா என தமிழ்நாடு அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா தடுப்பு பணிகளுக்காக இரண்டாயிரம் கூடுதல் மருத்துவர்கள்

சென்னை: கரோனா தடுப்புப் பணிகளுக்காக சென்னையில் கூடுதலாக இரண்டாயிரம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.