ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm - tamilnadu latest news

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 3 pm
3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm
author img

By

Published : Mar 17, 2021, 3:03 PM IST

'படித்து பட்டம் பெற்றதற்காக இளைஞர்களை துன்புறுத்தும் அரசு' - சாடும் ராகுல்

"இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமல் பார்த்துக் கொண்டு, படித்து பட்டம் பெற்ற இந்திய இளைஞர்களை மத்திய அரசு துன்புறுத்தி வருகிறது" என ராகுல் சாடியுள்ளார்.

'அவருக்கு தக்க பாடம் புகட்டுங்கள்’: விஜயபாஸ்கர்

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு இந்தத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுங்கள் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல்... ரவிச்சந்திரனுக்கு பரோல் மறுப்பு - அரசு விளக்கம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு இரண்டு மாதம் பரோல் வழக்குமாறு அவரது தரப்பிலிருந்து கோரப்பட்டுள்ள நிலையில், அதற்கு கரோனா பரவலை காரணம் காட்டி தமிழ்நாடு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 5 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கடைகளில் வருமானவரித் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் 5 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்கள் கொண்டு கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பம்மலில் ஏசி பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து - பொருள்கள் நாசம்

பம்மலில் இயங்கிவரும் ஏசி பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் நாசமாகின.

லாரி டிரைவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல்

போரூர் அருகே ஆந்திராவிலிருந்து முட்டை லோடு ஏற்றிவந்த லாரி டிரைவரிடம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 950 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பாஜகவில் இணைந்த பிரபல பெண் தாதா எழிலரசி கைது!

தனிப்படை காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த பிரபல பெண் தாதா எழிலரசி காரைக்கால் அருகே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தவர்.

நைஜர் துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் உயிரிழப்பு!

நைஜரில் உள்ள சந்தையொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பிரபலங்களின் பாராட்டு மழையில் 'எஞ்சாயி எஞ்சாமி'

நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் செல்வராகவன் இருவரும் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடலை வெகுவாகப் பாராட்டி, தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.