ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top ten
top ten
author img

By

Published : Jul 3, 2020, 3:21 PM IST

ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு

சென்னை : ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

'சாத்தான்குளம் வழக்கில் அரசு தலையீடு இல்லை, மேலும் சிலர் கைது செய்யப்படலாம்' - ஐ.ஜி சங்கர்

தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் அரசு தலையீடு இல்லை, விசாரணையின் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தெரிவித்தார்.

ஆப்பிள் கேம்ஸ்: சீன பயனர்களுக்கு இனி அப்டேட் கிடையாது!

சீன அரசின் விதிமுறைகளுக்கு இணங்க, சீனாவில் பயனர்கள் பயன்படுத்திவரும் ஆப்பிள் கேம்ஸ் எனும் இணைய விளையாட்டு செயலியை, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து புதுப்பிக்கும் முயற்சியை நிறுவனம் தற்காலிகமாக கைவிட்டுள்ளது.

பின்னலாடைத்துறையில் சீனாவை விஞ்சுமா இந்தியா?

உலக அரங்கில் பின்னலாடை வர்த்தகத்தில் சீனா 39 விழுக்காடு ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவின் பங்கு 3.8 விழுக்காடு ஆக உள்ளது. ஒருவேளை, சீனாவின் மீதான அவநம்பிக்கை காரணமாக இந்தியாவுக்கு பின்னலாடை ஆர்டர்கள் கிடைத்தாலும் கூட அதை செய்து முடிப்பதற்கான முழு ஆற்றல் நம்மிடம் இல்லை.

லடாக் எல்லைப் பகுதிக்கு பிரதமர் மோடி திடீர் பயணம்

இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் லடாக்கில் உள்ள லே எல்லைப்பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி திடீர் பயணம் மேற்கொண்டார்.

'தமிழ்நாட்டை புனரமைக்கும் பணியில் பங்களிக்க மக்களை அழைக்கிறோம்'

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தை முறையாக கையாளவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'ரெண்டு பெண் குழந்தைகள பெத்து போட்டத நெனச்சாலே நெஞ்சு பதறுது' - இயக்குநர் ரத்னகுமார்

சென்னை: 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இயக்குநர் ரத்னகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.

ஹாங்காங் மக்கள் அகதிகளா?" - அமெரிக்காவின் மசோதாவுக்கு சீனா கடும் எதிர்ப்பு

பெய்ஜிங்: சீனாவுக்கு அஞ்சி அமெரிக்கா செல்லும் ஹாங்காங் மக்களுக்கு அகதிகள் அந்தஸ்தை வழங்கும் வகையில் அமெரிக்கா இயற்றிய சட்டத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அறந்தாங்கி வன்கொடுமை: நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் - ஹர்பஜன் சிங் ட்வீட்!

சென்னை: அறந்தாங்கி வன்கொடுமையை நினைவு கூர்ந்து, “நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

கோவிட் -19: உயிரா அல்லது வாழ்வாதாரமா? அரசு முன் நிற்கும் கடினமான தேர்வு

இந்தியாவில், மார்ச் 5 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை ஐந்து கட்ட ஊரடங்கிற்கு பிறகு ஜூன் 8 முதல் மோடி அரசாங்கம் பொருளாதாரத்தைத் திறக்கத் தொடங்கியது. கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மேம்படுத்த வழிவகுத்து வருவாய் வசூலை அதிகரிக்க செய்தன, ஆனால் அவற்றுடன் கோவிட்-19 நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.