ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 1 news @ 3PM

author img

By

Published : Jul 2, 2020, 3:04 PM IST

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 3 pm
Top 10 news @ 3 pm

நேர்மையுடன் சாட்சியமளித்த காவலருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் - திருமாவளவன்

சென்னை: நேர்மையுடன் சாட்சியமளித்த காவலருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்காணிக்க முடியவில்லை என்றால் எதற்கு தனிமைப்படுத்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க முடியவில்லை என்றால் எதற்காக தனிமைப்படுத்த வேண்டும்? என உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

’தகாத வார்த்தைகளில் பேசக்கூட தயங்கமாட்டார்’: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் குறித்து வெளிவரும் பகீர் தகவல்கள்!

பத்து வருடங்களுக்கு முன்பே காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் இரண்டு உயிர்கள் பறிபோக வாய்ப்பில்லை என ஸ்ரீதரால் பாதிக்கப்பட்ட ஜவஹர் தெரிவித்துள்ளார்.

ஹேக் செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் வலைதளம்!

டெல்லி: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட்டை விட்டு விலக சுஷாந்த் பட நடிகை முடிவு?

சுஷாந்துடன் தில் பெச்சாரா திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை சஞ்சனா, டெல்லியில் இருந்து சுஷாந்த் விசாரணைக்காக மும்பை வந்துள்ளார். மீண்டும் டெல்லி புறப்பட்ட சஞ்சனா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவால் அவர் பாலிவுட்டை விட்டு விலகுகிறாரா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோ: மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 24 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ: மத்திய மெக்சிகோ பகுதியிலுள்ள பதிவு செய்யப்படாத போதை மறுவாழ்வு மையத்தில் அடையாளம் தெரியாத சிலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 24 பேர் கொல்லப்பட்டனர்.

கரோனாவுக்கான மருந்துகள் அனைத்தையும் அமெரிக்காவே வாங்குகிறது - உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மருந்துகள் அனைத்தையும் அமெரிக்கா மட்டுமே வாங்குகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அமேசானுடன் பல மில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்த பிரியங்கா

நடிகை பிரியங்கா சோப்ரா அமேசான் நிறுவனத்துடன் பல மில்லியன் டாலர் மதிப்புடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குக்கான இரண்டு வருட ஒப்பந்தம் போட்டுள்ளார்.

விதிகளை மீறி இயங்கிய கடைகளுக்கு சீல்!

விழுப்புரம்: செஞ்சியில் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்ட 7 கடைகளுக்கு துணை ஆட்சியர் அனுஸ்ரீ சீல் வைத்தார்.

நள்ளிரவில் சலவைத் தொழிலாளி வெட்டிக் கொலை - குற்றவாளிக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த சலவைத் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த குற்றவாளியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.