ETV Bharat / state

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் - 1 pm news

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம்..

top 10 news @ 1pm
top 10 news @ 1pm
author img

By

Published : Jul 26, 2021, 1:13 PM IST

1. எடியூரப்பா ராஜினாமா- பின்னணி என்ன?

கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில் பரபரப்பு பின்னணிகள் வெளியாகியுள்ளன.

2. எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்க உத்தரவு

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3. மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் - தமிழ்நாடு அரசு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

4. போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வுபெற்ற ஊழியர்களை பணியமர்த்த தடை

ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களை ஜூலை 31ஆம் தேதிக்கு பின் தற்காலிக பணியில் ஈடுபடுத்தக்கூடாது என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

5. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி டிராக்டர் பேரணி!

ஒன்றிய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று டிராக்டர் பேரணி நடத்தினார்.

6. அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - ஆன்லைன் விண்ணப்பம் நடைமுறை தொடங்கியது

தமிழ்நாட்டிலுள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை இன்றுமுதல் (ஜூலை 26) தொடங்கியுள்ளது.

7. அரசு பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர் சேர்க்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு பள்ளிகளில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 379 மாணவர் மாணவிகள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

8. மூத்தத் தமிழறிஞர் இளங்குமரனார் மறைவு தமிழுக்கு பேரிழப்பு- திருமாவளவன்

மூத்தத் தமிழறிஞர் இளங்குமரனார் மறைவிற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

9. ஜெய்ஹிந்த்- கார்கில் வெற்றி தினம்- தலைவர்கள் மரியாதை!

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் துருப்புகள் விரட்டியடிக்கப்பட்ட கார்கில் வெற்றி தினம் இன்று.!

10. பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்

பழம்பெரும் நடிகை ஜெயந்தி இன்று (ஜூலை 25) காலமானார். அவருக்கு வயது 76.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.