ETV Bharat / state

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 1PM
Top 10 news @ 1PM
author img

By

Published : Jan 14, 2021, 1:05 PM IST

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... பாயும் காளைகள்: துணிந்து அடக்கும் வீரர்கள்!

மதுரை: தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் வீரர்கள் போட்டிபோட்டுக்கொண்டு காளைகளை அடக்கி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டை கண்டுகளித்த ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின்!

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டினைப் பார்வையிட வருகை தந்த ராகுல் காந்தியின் அருகே அமர்ந்து உதயநிதி ஸ்டாலின் கோலாகலமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டினை கண்டு ரசித்தார்.

’தீயினால் சுட்டப் புண்’- சிறுமிக்கு திருக்குறள் கற்றுக் கொடுத்த ஆர்எஸ்எஸ் தலைவர்

சென்னை: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், சிறுமிக்கு திருக்குறள் கற்றுக் கொடுக்கும் வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

காவலர்கள் குடும்பத்துடன் பொங்கல் விழா கொண்டாடிய முதலமைச்சர்

சென்னை: காவல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மிகைநேர பணி ஊதியம் வருங்காலத்திலாவது உயர்த்தப்படுமா? : எதிர்நோக்கும் காவல் துறையினர்

சென்னை: காவலர்களுக்கு மிகைநேர பணி ஊதியம் 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக வழங்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி இன்று தெரிவித்தார். ஆனால் இதுவரை தங்களுக்கு மிகைநேர பணி ஊதியம் உயர்த்தப்படவில்லை என காவல் துறையினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

மாயூரநாதர் ஆலய அம்பாளுக்கும் சுவாமிக்கும் நெய் அபிஷேகம்!

மயிலாடுதுறை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் அம்பாளுக்கும், சாமிக்கும் 108 லிட்டர் நெய் அபிஷேகம் நடைபெற்றது

திடீரென இறந்த 4 காகங்கள்: கால்நடை அலுவலர்கள் ஆய்வு!

திருவள்ளூர்: பழவேற்காட்டில் திடீரென இறந்த நான்கு காகங்கள் குறித்து கால்நடைத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தாய்லாந்து ஓபன்: இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் வெற்றி பெற்றார்.

தரங்கம்பாடியில் பெய்யும் கனமழையால் 35 வீடுகள் சேதம்!

மயிலாடுதுறை: தரங்கம்பாடி பகுதியில் தொடர்ந்து கொட்டி தீர்க்கும் கனமழையால் குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் புகுந்தது. சுமாராக 35 வீடுகள் சேதமடைந்துள்ளன.

'சர்க்கரை பொங்கல் போல் இனிய சொற்கள் பேச வேண்டும்'- ஆர்எஸ்எஸ் தலைவர்

நாம் பேசும் வார்த்தைகளால் சண்டைகள் வராமல் இருக்க 'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு' என்ற திருக்குறளை உணர்ந்து நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என சென்னையில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.