ETV Bharat / state

11 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 11AM - undefined

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம் இதோ..

Top 10 news @ 11AM
Top 10 news @ 11AM
author img

By

Published : Mar 25, 2021, 11:08 AM IST

பாசிசி சக்திகள், திமுக சந்தர்பவாத அரசியலில் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும் - ஓவைசி பேச்சு

பாசிச சக்திகளிடமிருந்தும், திமுகவின் சந்தர்பவாத அரசியலில் இருந்தும் தமிழ்நாட்டை காத்திட வேண்டும். தங்களை மதசார்பற்ற கட்சி என்று கூறிக்கொள்பவர்கள் நாளையே மோடியின் கைப்பாவையாக மாறமாட்டார்கள் என்பதற்கு யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுத்தீன் ஓவைசி பேசியுள்ளார்.

மோடியை எதிர்க்கக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின்தான்- உதயநிதி

கன்னியாகுமரி: இந்தியாவிலேயே மோடிக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின்தான் என பரப்புரையின் போது பேசிய உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

நாமக்கல் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...!

ஊருக்கு நடுவே ஒற்றைப் பாறையாய் உயர்ந்து, உச்சியில் கோட்டையை உடைய நாமகிரிமலை இருக்கும் நாமக்கல் மாவட்டத்தில், தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்..

கோடை காலத்தில் கிராமப்புறங்களுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்க- நவீன் பட்நாயக்

கோடை காலத்தில் கிராமப் புறங்களுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

’சின்னம்மா ஆசி பெற்ற வேட்பாளர்’ - டிடிவி பரபரப்புரையில் தொண்டர் கோஷத்தால் சலசலப்பு

செண்டை மேளம் முழங்க, தொண்டர் படையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட டிடிவி தினகரன், எதுவும் பேசாமல் கையசைத்துச் சென்றார். அப்போது சின்னம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர் என்று அவரை தொண்டர் ஒருவர் குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

ஊழலின் மையப்புள்ளியாக கேரளா மாறிவிட்டது- அமித் ஷா

ஊழலின் மையப்புள்ளியாக கேரளா மாறிவிட்டது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் இன்று பரப்புரை!

மேற்கு வங்கத்தின் ஜாய்பூர், தல்டங்ரா மற்றும் காக்தீப் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று உரையாற்றுகிறார்.

பூம்புகாரில் பரப்புரைக்குச் சென்ற திமுக வேட்பாளருக்கு அமோக வரவேற்பு

மயிலாடுதுறை: பூம்புகார் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளச் சென்ற திமுக வேட்பாளரை ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்றனர்.

திண்டிவனத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

விழுப்புரம்: திண்டிவனத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பூப்பந்து விளையாடி வானதி சீனிவாசன் வாக்கு சேகரிப்பு!

கோவை: தெற்கு தொகுதிக்கு உள்பட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று (மார்ச்.25) காலை பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுடன் சிறிது நேரம் பூப்பந்து விளையாடி வாக்கு சேகரித்தார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.