ETV Bharat / state

காலை 11 மணி செய்திகள் TOP 10 NEWS @ 11 AM - காலை 11 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திகள்

top-10-news-at-11-am
top-10-news-at-11-am
author img

By

Published : Oct 21, 2021, 11:15 AM IST

1. ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பொள்ளாச்சி வழக்கில் எஸ்.ஐ., உள்பட 7 காவலர்கள் சஸ்பெண்ட்!

பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில், குற்றவாளிகளுக்கு சலுகை காட்டியதாக சேலம் ஆயுதப்படையைச் சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ., உள்பட 7 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

2. பசும்பொன் முத்துராமலிங்கனார் குருபூஜை: நேரில் மரியாதை செலுத்துகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

வரும் அக்.30 கடைபிடிக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்கனாரின் குருபூஜை விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்த இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. விஜய பாஸ்கரின் வங்கி லாக்கரை ஆய்வு செய்ய முடிவு - லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வங்கி லாக்கரை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.

4. தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மங்கிகேப் கொள்ளையன் கைது

கள்ளக்குறிச்சியில் பல்சர் பைக்கிள், மங்கிகேப் போட்டுக்கொண்டு தொடர் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்தவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

5. திருச்சி, கோவை, குமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி, கோவை, குமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6. காவலர் நினைவு தினம்- வீரவணக்கம் செலுத்திய ஸ்டாலின்!

உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

7. நடவுப் பணிகளில் ஒலித்த பாடல்!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சம்பா நடும் பணிகளில் ஈடுபட்ட பெண்கள், களைப்பு தெரியாமல் இருப்பதற்காக, சினிமா பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் போன்றவைகளை பாடி கொண்டே பணியினை மேற்கொண்டனர்.

8, 20 நாள்களுக்கு பின் 10 நிமிடங்கள்: சிறையில் மகனை சந்தித்த ஷாருக் கான்!

போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆர்யன் கானை, நடிகர் ஷாருக் கான் இன்று காலை 10 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.

9. 'யூனிக் ஐகான்'- தேங்காய் சீனிவாசன்!

திரையுலகில் தனக்கென தனி பாணியையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்திருந்த தேங்காய் சீனிவாசனுக்கு இன்று பிறந்தநாள்

10. இளங்காத்து வீசுதே.. ஹேப்பி பர்த் டே சங்கீதா!

தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் சங்கீதா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடிவருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.