ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

author img

By

Published : Apr 8, 2021, 11:34 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 11 am
காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

'மறக்க முடியாத தருணம்' - பிரதமருக்கு தடுப்பூசி செலுத்திய மகிழ்வில் செவிலியர்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திய பஞ்சாபைச் சேர்ந்த செவிலி சர்மா, இது மறக்க முடியாத தருணம் எனக் கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

'தலைக்கு தில்ல பாத்தியா' - மூங்கில் கிளையை வளைத்து சாலையின் நடுவே நின்ற யானை

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், யானை ஒன்று சாலையின் நடுவே நின்றபடி மூங்கில் கிளையை வளைத்துச் சாப்பிடும் காணொலி வெளியாகியுள்ளது.

'முதலை ஷாப்பிங் வந்திருக்கா?' - தாய்லாந்து கடையைக் கதிகலங்க வைத்த நிகழ்வு

தாய்லாந்தில் மிகப்பெரிய உருவம்கொண்ட உடும்பு ஒன்று, சிறப்பு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் புதிய உச்சம் தொட்ட கரோனா

நாட்டில் மேலும் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு புதிதாகக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 685 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிற்கு 2,200 புதிய விமானங்கள் தேவைப்படும் - போயிங் நிறுவனம்

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 2022ஆம் ஆண்டின் 2ஆம் பாதியில் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும், அதன் காரணமாக அடுத்த 20 ஆண்டுகளில் 2,200 புதிய விமானங்கள் தேவைப்படும் எனவும் விமான உற்பத்தி நிறுவனமான போயிங் தெரிவித்துள்ளது.

இந்தியப் பயணிகள் நியூசிலாந்தில் தடை

கரோனா தொற்று அதிகரித்துவருவதால், இந்தியாவிலிருந்து நியூசிலாந்திற்குச் செல்லும் பயணிகளுக்குத் தற்காலிகமாகத் தடைவிதித்து அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் உத்தரவிட்டுள்ளார்.

சிதம்பரம் அருகே பஸ், லாரி மோதல்: 3 பேர் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே அரசு சொகுசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேர் உயரிழந்தனர்.

மும்பையில் தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி விமான நிலையத்தில் கைது

துபாயில் மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கொலை குற்றவாளி சிறப்பு விமானத்தில் துபாயிலிருந்து திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை

முன்விரோதம் காரணமாக இளைஞரை ரவுடிகள் வெட்டிக்கொலை செய்தனர். இது குறித்து காவல் துறையினர் நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஹைதராபாத் செல்கிறார் 'அண்ணாத்த' ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.