’முதலமைச்சர் மாவட்டம்’ என்ற பெயர் நீடிக்க அதிமுகவுக்கு வாக்களியுங்கள்’ - ஓமலூர் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி
'சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதுடன், பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்திய அரசிடமிருந்து விருது வாங்கியிருக்கும் அதிமுக அரசு, முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது. ஆனால், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுகவினர் கோரப்பசியுடன் இருப்பதால், தில்லு முல்லு செய்து ஆட்சிக்கு வரப் பார்க்கிறார்கள்” - முதலமைச்சர் பழனிசாமி
’தேர்தல் போக்கு விமர்சனங்களில் எங்கள் பங்களிப்பு இல்லை’ - லயோலா கல்லூரி முதல்வர் பகீர்
சென்னை: எதிர் வரும் தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து, லயோலா கல்லூரியின் பெயரில் வெளியான கருத்துக் கணிப்புக்கும், தங்கள் கல்லூரிக்கும் தொடர்பில்லை என அக்கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது.
ராமநாதபுரத்தில் திரும்பப் பெறப்பட்ட 9 வேட்புமனுக்கள்!
ராமநாதபுரம்: மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து ஒன்பது வேட்புமனுக்களை திரும்பப் பெறப்பட்டுள்ளன.
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல் துறை தாக்குதல்!
சென்னை: மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மீது காவல் துறையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்
அரசு வேலை வாங்கி தருவதாக பாலியல் சுரண்டல்- பாகுபலி எம்எல்ஏ உறவினர் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!
உத்தரப் பிரதேசத்தின் பாகுபலி தொகுதி எம்எல்ஏவின் மருமகன் மீது இளம்பெண் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
பாஜக தேர்தல் அறிக்கை: கட்டாய மதமாற்ற தடைச் சட்டம், பசுப் பாதுகாப்பு சட்டம்
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், பசுப் பாதுகாப்பு சட்டம், பஞ்சமி நிலம் மீட்பு என பல முக்கிய அம்சங்களைக் கொண்ட பாஜக தேர்தல் அறிக்கை, நேற்று (மார்ச்.22) வெளியிடப்பட்டது.
’அதிமுகவையும் பாமகவையும் பாஜக அழிக்கும்’ - திருமாவளவன் எம்பி
செங்கல்பட்டு: ’தமிழ்நாட்டில் அதிமுகவையும் பாமகவையும் அழிக்கப்போவது பாஜக தான்’ என விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் மீதான புகார்: சிபிஐ விசாரணையை துரிதப்படுத்தக் கோரும் பாஜக
மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் குறித்து மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், முதலமைச்சர் உத்தவ் தாக்ரே இது குறித்து நியாயமான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி. பி.பி. சௌத்ரி கேட்டுக் கொண்டுள்ளார்.
மார்ச் 26 விவசாயிகள் பாரத் பந்த்- அடிபணியுமா மத்திய அரசு!
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு விவசாய அமைப்புகள் மார்ச் 26ஆம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு (பந்த்) போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடைபெறுகிறது.
பேருந்து, ஆட்டோ மோதி விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பேருந்தும், ஆட்டோவும் மோதியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.