சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக மேலும் 5 காவலர்கள் கைது
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, வேல்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் உள்பட 5 பேர் கைது. மேலும் 5 காவலர்களிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை.
ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணி எப்போது முடியும்? - முதலமைச்சர் ஆலோசனை
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர்கள், அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
'மீண்டும் ஊரடங்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: மீண்டும் ஊரடங்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
வீடியோ எடுத்தவரின் செல்போனை பறித்த வட்டாட்சியர் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
அரியலூர்: மணல் கொள்ளை குறித்து பேசிய மக்களிடம் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாஸ்க் பரோட்டா 'கரோனா' தோசை - மதுரையை அசத்தும் 'டெம்பிள் சிட்டி'
மதுரை: மக்களுக்கு முகக்கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரபல தனியார் உணவகம் ஒன்று மாஸ்க் பரோட்டாவை அறிமுகம் செய்துள்ளது.
கூட்டம் கூடினால் அலாரம் அடிக்கும் - தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க ஐரிஸ் கருவி!
திருவள்ளூர்: திருமழிசை காய்கறி சந்தையில் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க ஐரிஸ் என்ற புதிய கருவியினை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.
கரோனாவைக் கட்டுப்படுத்த பாதிக்கப்படாதவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தேவை!
டெல்லி: கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அந்நோய் பாதிக்கப்படாதவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி செலுத்தினால், தொற்று பரவலைக் கட்டுபடுத்த முடியும் என ஸ்பெயின் நாட்டின் அறிவியல் அறிக்கை தெரிவிக்கிறது.
"நினைவிருக்கிறதா?" - பிரதமர் நரேந்திர மோடியின் பழைய ட்வீட்டை வைத்து கேள்வியெழுப்பும் காங்கிரஸ்!
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டிருந்த பழைய ட்வீட்டை மேற்கோள்காட்டி, சொந்த மண்ணிலிருந்து இந்திய வீரர்கள் விலகச் சொன்னதன் காரணம் குறித்து, காங்கிரஸ் கட்சியினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
கான்பூர் என்கவுண்டர் வழக்கு : விகாஸ் துபே கூட்டாளிகளின் புகைப்படங்கள் வெளியீடு
லக்னோ : கான்பூர் என்கவுண்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியும், நிழல் உலக தாதாவுமான விகாஸ் துபே கூட்டாளிகளின் புகைப்படங்களை கான்பூர் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
WHO-விலிருந்து விலகுவது குறித்து ஐநாவுக்கு அமெரிக்கா நோட்டீஸ்
வாஷிங்டன் : உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவது குறித்து ஐநாவுக்கு, அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கை அனுப்பியுள்ளது.